20 நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த 'மெர்சல்' டிக்கெட் - பிரபல தியேட்டர் நிர்வாகம் ட்வீட்
நெல்லை : விஜய் நடிப்பில் 'மெர்சல்' படம் இந்த வருட தீபாவளி சரவெடியாக திரைக்கு வரவுள்ளது. இப்படத்தைப் பார்க்க உலகம் முழுவதும் விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், சென்னையில் ரோகிணி, பரிமளம், மர்லின் ஆகிய தியேட்டர்களில் மட்டும் 'மெர்சல்' படத்துக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. அந்தப் பகுதிகளில் ரசிகர்கள் கூட்டத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் முழுவதும் ஒன்றிரண்டு தியேட்டர்களில் மட்டுமே டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. நெல்லையில் உள்ள ராம் முத்துராம் திரையரங்கில் மெர்சல் டிக்கெட் விற்பனை சாதனை படைத்துள்ளது.

சென்சார் பிரச்னை
'மெர்சல்' படத்தின் சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் ரிலீஸ் தொடர்பாக சிக்கல் இன்னும் நீடிக்கும் நிலையிலும் ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் டிக்கெட் ரிசர்வ் செய்துவருகின்றனர்.
நெல்லையில் 'மெர்சல்' முன்பதிவு
மெர்சல் படத்தின் ரிசர்வேஷன் தமிழகத்தில் சில இடங்களில் தொடங்கி நடந்துவருகிறது. நெல்லை ராம் முத்துராம் தியேட்டரில் முதல் காட்சிக்கான முன்பதிவு தொடங்கி 20 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்துவிட்டதாம்.
FDFS டிக்கெட்
வழக்கமாக, படத்தின் ரிலீஸுக்கு முந்தைய நாள் அல்லது இரண்டு நாட்கள் முன்பு தான் FDFS காட்சி டிக்கெட்டுகள் விற்றுத் தீருமாம். ஆனால் மெர்சல் 20 நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டும் விற்று தீர்ந்துவிட்டது.
கேரள ரசிகர்களும்
'மெர்சல்' டிக்கெட்டுகளை வாங்க சென்னை, கேரளாவில் இருந்து கூட ரசிகர்கள் ராம் முத்துராம் தியேட்டருக்கு வந்துள்ளனராம்.
பிரமாண்ட அலங்காரம்
நெல்லை ராம் முத்துராம் தியேட்டரை மறைக்கும்படி 120 அடி உயரத்தில் பிரமாண்டமாக கட் அவுட்களை வைத்து அலங்கார வளைவு அமைத்திருக்கிறார்கள் நெல்லை மாவட்ட விஜய் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











