லீக்கானது மெர்சல் படத்தில் விஜய்க்கு டூப் போட்ட காட்சி.. எப்படியெல்லாம் எடுக்குறாங்க பாருங்க!

சென்னை: பிகில் படத்தில் இளம் வயது விஜய்க்கு டூப் போட்ட காட்சி லீக்காகி வைரலான நிலையில், தற்போது மெர்சல் படத்தின் மேக்கிங் காட்சி ஒன்றும் லீக் ஆகி உள்ளது.

டபுள் ஆக்‌ஷன் காட்சிகளை படமாக்க நடிகர்களின் உருவ ஒற்றுமையை ஒத்து இருக்கும் நபர்கள் டூப் போடுவது வழக்கம் தான்.

ஆனால், பெரும்பாலும் படக்குழு இதுபோன்ற VFX பிரேக் டவுன்களை அதிகாரப்ப்பூர்வமாக வெளியிடாமல் ரகசியமாக வைத்திருப்பார்கள்.

சமூக வலைதளம்

சமூக வலைதளம்

ஆனால், சமூக வலைதளம் வந்த பிறகு, திரைப்படக் காட்சிகள் ஷூட்டிங்கின் போதே லீக் ஆவதும், எடிட்டிங் டேபிளில் இருந்து கசிவதும் என ஏகப்பட்ட அலப்பறைகள் நடந்து வருகின்றன. டூப் போடும் நடிகர்களுக்கு பெரிய அங்கீகாரம் கிடைக்காமல் போவதால், அவர்களில் சிலர், இதனை இணையத்தில் கசியவிட்டும் புகழ் தேடி வருகின்றனர்.

Recommended Video

THALAPATHY POWER DANCE MOVES | ASHWIN ANALYSE |THALAPATHY BIRTHDAY SPECIAL |FILMIBEAT TAMIL
டம்மி நடிகர்

டம்மி நடிகர்

ஆனால், திரைப்படத்தில் நாம் பார்ப்பது, அந்த டூப் நடிகரின் நடிப்பை அல்ல என்பதை இங்கே நிச்சயம் குறிப்பிட வேண்டும். ஒரு பாதி காட்சிக்கு ஒரு நபரின் சப்போர்ட் தேவை என்பதாலே இது போன்ற டம்மி நடிகர்களை ஷூட்டிங்கில் பயன்படுத்துவார்கள். ஆனால், இரண்டு தோற்றத்திலும், சம்பந்தப்பட்ட அந்த டாப் ஹீரோவே வேடமிட்டு நடித்துக் கொடுப்பார் என்பது தான் உண்மை.

ஸ்டன்ட் காட்சிகளுக்கு இது பொருந்தாது

ஸ்டன்ட் காட்சிகளுக்கு இது பொருந்தாது

சண்டை காட்சிகளுக்கு உயிரை பணயம் வைத்து ஸ்டன்ட் செய்யும் கலைஞர்களுக்கு இது பொருந்தாது. அவர்களின் முகம் தெரியாத வண்ணம் கேமராமேன் ட்ரிக்ஸ் செய்து ஹீரோவின் முகம் மட்டுமே தெரியும் வண்ணம் படமெடுப்பார். கொஞ்சம் பழைய படங்களை ஸ்லோ மோஷனில் பார்த்தால், பல காட்சிகளில் ஸ்டன்ட் கலைஞர்களுக்கும் நட்சத்திர நடிகர்களுக்கும் சண்டை காட்சிகளின் போது தெளிவாகவே வேறுபாடு தெரியும், சில காட்சிகளில் அவர்களின் முகமே கூட தெரியும் அளவுக்கு படமெடுத்திருப்பார்கள்.

சினிமா டெக்னிக்

சினிமா டெக்னிக்

மேஜிக் ஷோவை போலத்தான் சினிமாவும், லாஜிக்கா எப்படி மக்களை ஏமாற்றுவது என்பதற்காக மேஜிக் கலைஞர்கள் சில பல இயற்பியல் முறைகளையும், டெக்னிக்கையும் பயன்படுத்துவது போலத்தான். இது போன்ற டபுள் ஆக்‌ஷன் காட்சிகளை எடுக்கவும் இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் டெக்னாலஜியையும் மூளையையும் பயன்படுத்தி நம் கண் முன்னே இரண்டு அஜித், மூன்று விஜய், நூறு ரஜினி என காட்டுவது எல்லாம்.

லீக்கான பிகில் மேக்கிங்

லீக்கான பிகில் மேக்கிங்

சமீபத்தில் டூப் நடிகர் ஸ்ரீ ராம் என்பவரின் பெயரில் உள்ள ட்விட்டர் ஐடியில் இருந்து பிகில் படத்தில், இளம் விஜய் கதாபாத்திரத்திற்காக டம்மியாக அவர் நடித்திருந்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டன. பிகில் படத்தின் VFX காட்சிகள் பிரேக் டவுன் ஆன நிலையில், அது போலி ஐடி என்ற தகவலும் பரவியது.

மெர்சல் மேக்கிங்

இந்நிலையில், தற்போது மெர்சல் படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றையும் அதே ட்விட்டர் ஐடி வெளியிட்டுள்ளது. அதில், மெர்சல் படத்தில், டாக்டர் விஜய்யை எதிரிகள் சுத்தியலை கொண்டு அடிக்க வரும் போது, மேஜிக்மேன் விஜய் வந்து தடுக்கும் காட்சியிலும் நடிகர் ஸ்ரீராமே விஜய்க்கு டம்மியாக நடித்துள்ள வீடியோ கசிய விடப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X