'மெர்சல்' கிராஃபிக்ஸ் காட்சிகள் மேக்கிங் ரிலீஸ்... வைரலாகும் வீடியோ
Recommended Video

சென்னை : அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த 'மெர்சல்' படம் வெளிவந்து கடும் சர்ச்சையையும் உருவாக்கி மிகப்பெரும் வசூலையும் குவித்தது.
'மெர்சல்' படத்தில் இடம்பெற்ற VFX மற்றும் கிராஃபிக்ஸ் காட்சிகள் உறுத்தாமல், ரசிகர்களால் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அமைக்கப்பட்டிருந்தன.
கிராஃபிக்ஸ் காட்சிகள் உருவாக்க வீடியோ VFX நிறுவனத்தின் சார்பில் நேற்று யூ-ட்யூபில் வெளியிடப்பட்டது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

மெர்சல்
விஜய் நடித்து வெளிவந்த படங்களிலேயே அதிக வசூலைப் பெற்ற படம் என்று பெருமையைப் பெற்றது 'மெர்சல்'. இப்படத்தில் இடம்பெற்ற சில சர்ச்சைக்குரிய வசனங்களால் எதிர்ப்பு கிளம்பி, படத்துக்கு நல்ல விளம்பரம் தேடித் தந்தது.
மெர்சல் கிராஃபிக்ஸ்
தமிழ் சினிமாவில் சமீபகாலத்தில் வெளிவந்த படங்களில் 'மெர்சல்' படத்தின் VFX, கிராபிக்ஸ் காட்சிகள் ரசிகர்களால் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு ரசிக்கப்பட்டன. அந்தப் படத்தில் பெரும்பாலான காட்சிகள் VFX காட்சிகளாகவும் அமைக்கப்பட்டன.

டபுள் ஆக்ஷனில் விஜய்
விஜய் டபுள் ஆக்ஷனில் வரும் காட்சிகளில் பயன்படுத்தப்பட்ட கிராஃபிக்ஸ் வேலைகள் ரசிகர்களால் சிறிதும் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு இருந்தன. அதனால், இப்படத்தின் கிராஃபிக்ஸ் வேலைகள் பெரிதும் ஈர்த்தன.

VFX மேக்கிங் வீடியோ
'மெர்சல்' படத்தின் VFX காட்சிகளின் உருவாக்க வீடியோ ஒன்று நேற்று யூ-ட்யூபில் வெளியிடப்பட்டது. படத்தில் எந்த அளவிற்கு அந்தக் காட்சிகள் மிகவும் இயல்பாக அமைக்கப்பட்டுள்ளது என்பது அந்த வீடியோவைப் பார்க்கும் போது தெரிகிறது.

ஹாலிவுட்டுக்கே சவால்
எதிர்காலத்தில் ஹாலிவுட் படங்களுக்கும் சவால் விடும் அளவில் தமிழ்ப் படங்களில் VFX மற்றும் கிராஃபிக்ஸ் காட்சிகள் அமையப் போகிறது என்பதற்கு இந்த 'மெர்சல்' வீடியோவே சாட்சி. இந்த உருவாக்க வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











