மெர்சல் ரசிகர்களே... ரெடியா? நீங்க எதிர்பார்த்தது இன்னிக்கு ரிலீஸ் #MersalVisualFest

By Vignesh Selvaraj

சென்னை : அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் பல தடைகளைக் கடந்து வெளியான 'மெர்சல்' திரைப்படம் ரசிகர்களின் பலத்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் வசூலைக் குவித்தது அனைவரும் அறிந்ததே.

'மெர்சல்' படத்தின் அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே உற்சாகமான ரசிகர்கள் படத்தின் டீசர், போஸ்டரை பயங்கர ஹிட்டாக்கியதோடு இல்லாமல் படத்தையும் செம சூப்பர்ஹிட் ஆக்கியுள்ளார்கள்.
'மெர்சல்' படத்தின் பாடல்களின் வீடியோக்களை எப்போது வெளியிடுவீர்கள் என தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் விஜய் ரசிகர்கள் கேட்டு வந்தனர். விரைவில் வெளியாகும் என தேனாண்டாள் பிலிம்ஸ் சி.இ.ஓ ஹேமா ருக்மணி பதிலளித்திருந்தார்.

 1 நிமிட வீடியோக்கள்

1 நிமிட வீடியோக்கள்

இந்நிலையில், படத்தில் இடம்பெற்ற பாடல்களின் ஒரு நிமிட வீடியோக்கள் ஒவ்வொன்றாகச் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இந்தப் பாடல்கள் வெளியானதும் யூ-ட்யூபில் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்தன.

வெறித்தன வெய்ட்டிங்

மெர்சல் படப் பாடல்களின் முழு வெர்சன் எப்போது வெளியாகும் என விஜய் ரசிகர்கள் வெறித்தன வெய்ட்டிங் மோடில் இருந்து வந்தனர். பாடல்கள் வெளியீடு பற்றிய அறிவிப்பு வரும் என எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

மெர்சல் பாடல்கள் முழு வெர்சன்

தற்போது 'மெர்சல்' படத்தில் இடம்பெற்ற எல்லாப் பாடல்களின் முழு வெர்சனும் இன்று வெளியாக இருக்கிறது. இந்த அறிவிப்பு 'மெர்சல்' படத்தின் ஆடியோ ரைட்ஸ் உரிமையைப் பெற்றுள்ள சோனி மியூசிக் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி இருக்கிறது.

மெர்சல் தான்

'மெர்சல்' படத்தின் பல அப்டேட்டுகளும் மாலை ஆறு மணிக்குத்தான் வெளியாகின. அதேபோல இப்போது அறிவிக்கப்பட்டுள்ள மெர்சல் வீடியோ பாடல்கள் வெளியீடும் ஆறு மணிக்கு இருக்கலாம் என ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X