Don't Miss!
- News
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்! கனிமொழி தந்த ஊக்கம்! நெகிழ்ந்து போன மாற்றுத்திறனாளி மாணவி!
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Sports
இந்தியா வெல்ல சூர்யகுமார் அதை செய்யனும்.. வாசிங்டன் சுந்தர் அதிரடிக்கு காரணம் -தினேஷ் கார்த்திக்
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
Messi: மாஸ் காட்டிய மெஸ்ஸி.. உலககோப்பையை தட்டித் தூக்கிய அர்ஜென்டினா.. வாழ்த்தும் பிரபலங்கள்!
சென்னை: FIFA உலககோப்பை 2022ன் இறுதி ஆட்டத்தை உலகில் உள்ள ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் என பலரும் கண்டு ரசித்தனர்.
மெஸ்ஸி கோல் அடித்ததில் இருந்தே இந்த போட்டியில் அர்ஜென்டினா தான் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், திடீரென வந்த பிரான்ஸ் வீரர் எம்பாப்பே 3 கோல்கள் அடித்து ஆட்டத்தை ஷூட் அவுட் முறைக்கு கொண்டு சென்றார். கடைசி நேர ட்விஸ்ட்டாக அர்ஜென்டினா ஷூட் அவுட் முறையில் 4 கோல்கள் அடித்து வரலாற்று வெற்றியை பதிவு செய்த நிலையில், பிரபலங்கள் பலரும் மெஸ்ஸியை கொண்டாடி வருகின்றனர்.

அர்ஜென்டினா வெற்றி
இரு அணிகளும் இப்படியொரு இறுதிப்போட்டியை விளையாடுவார்கள் என யாருமே எதிர்பார்க்கவில்லை. முதல் பாதியிலேயே அர்ஜென்டினா அணி 2 கோல்கள் அடித்த நிலையில், வெற்றி அந்த அணிக்குத்தான் என எண்ணிய நிலையில், திடீரென பிரான்ஸ் 2 கோல்கள் அடித்து சமன் செய்தது. பின்னர், மீண்டும் அர்ஜென்டினா 3வது கோல் அடிக்க கடைசி நேரத்தில் மறுபடியும் பிரான்ஸ் 3வது கோல் அடித்து எக்ஸ்ட்ரா டைம் மற்றும் ஷூட் அவுட் முறைக்கு கொண்டு சென்றது. ஆனால், கடைசியில் அர்ஜென்டினா அணி வீரர்கள் கோல்களை அடித்து வெற்றி பெற்றனர்.

பூஜா ஹெக்டேவுக்கு மூச்சே வந்துடுச்சு
மோகன்லால், மம்மூட்டி, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட பிரபலங்கள் நேரடியாக கத்தாருக்கே சென்று இறுதிப் போட்டியை கண்டு ரசித்தனர். டிவிக்கு முன் ஒட்டுமொத்த பிரபலங்களும் கால்பந்தாட்ட இறுதி போட்டியை பார்த்து வந்த நிலையில், நடிகை பூஜா ஹெக்டே.. இந்த மேட்ச் தான் எல்லா மேட்ச்சையும் விட சிறந்தது என்றும், தனக்கு இப்போ தான் மூச்சே வந்தது.. சூப்பர் மெஸ்ஸி என பதிவிட்டுள்ளார்.

தனுஷ் ஹாப்பி
ஃபேரி டேல் என்டிங் நிஜத்திலும் சாத்தியம் தான். இந்த ஆண்டின் சிறந்த ஹாப்பியான தினம் என்றால் அது இதுதான்.. மெஸ்ஸி! என ட்வீட் போட்டு நடிகர் தனுஷ் தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

செல்வராகவன் ட்வீட்
இயக்குநரும் நடிகருமான செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் மெஸ்ஸி கோல் அடித்த பின்னர் கொடுத்த போஸ் புகைப்படத்தை பதிவிட்டு தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தி உள்ளார். அர்ஜென்டினா வெற்றியை ஒட்டுமொத்த சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள், கிரிக்கெட் வீரர்கள் என பலரும் கொண்டாடி வருகின்றனர்.

தேங்க்யூ மெஸ்ஸி
நடிகரும் பிக் பாஸ் பிரபலமுமான கவின் தனது ட்விட்டர் பக்கத்தில் தேங்க்யூ மெஸ்ஸி என ட்வீட் போட்டு தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தி உள்ளார். கவின் ட்வீட்டுக்கு கீழ் ஏகப்பட்ட ரசிகர்கள் அர்ஜென்டினா உலக கோப்பையை வென்ற வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

விக்னேஷ் சிவன் சந்தோஷம்
Adrenaline messsssssssssiiiiiiiiiied !!!! என கமெண்ட் போட்டு என்னவொரு கேம் இது என்றும் பிரான்ஸ் வீரர் எம்பாப்பேவின் ஆட்டம் எல்லாம் வேறலெவல் அவருடைய கடும் உழைப்பு நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று என தனது கருத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார்.