twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    "மெடாவெர்ஸ்.." வீட்டிலிருந்தே மாய உலகில் உலவலாம்! விர்ச்சுவல் உலகை காண்பித்த டாப் மூவிஸ் #MetaVerse

    |

    அறிவியல், டெக்னாலஜி வளர்ச்சி எங்கெங்கோ செல்கிறது. அதில் முக்கியமான ஒரு வளர்ச்சித்தான் மெடாவ்ர்ஸ். 2017 ஆம் ஆண்டு ஸ்பீல்பெர்க் படத்தில் இதுகுறித்த காட்டியிருப்பார். அந்த மாய உலகம் நாம் இணையதளத்தில் நுழைவதுபோல் இதில் விஆர்/ஏஆர் கண்ணாடிகளை பயன்படுத்தி நுழையலாம். மெய்நிகர் உலக அற்புதங்களை பல திரைப்பபடங்கள் நமக்கு எளிதாக விளக்கியுள்ளன அது குறித்து பார்ப்போம்.

     மெடா வெர்ஸ் என்றால் என்ன?

    மெடா வெர்ஸ் என்றால் என்ன?

    மெடாவெர்ஸ் என்பது ஒரு ஆன்லைன் உலகம். அங்கு பயனர்களால் விளையாடவோ, வேலை பார்க்கவோ, ஒருவரோடு ஒருவர் நேரடியாக தொடர்பு கொள்ளவோ முடியும். விழாக்கள் ஏற்பாடு செய்து உலகின் எங்கோ ஒரு மூலையில் இருப்பவரையும் கலந்துக்கொள்ள செய்து அந்த உலகத்தில் ஜாலியாக உரையாடலாம். இவை அனைத்து ஒரு மெய்நிகர் சூழலில் வி.ஆர்/ஏஆர் முறையை பயன்படுத்தி செய்யலாம் என்பது தான் இதன் சிறப்பம்சம்.

    இதுதான் மெடா வெர்ஸ்

    அதிகம் குழப்பாமல் எளிதாக சொல்ல வேண்டுமானால் நீங்கள் வெளியில் ஷாப்பிங் மால் போன்ற இடங்களுக்கு சென்றால் அங்கு ஒரு த்ரீ-டி விளையாட்டு என முகத்தில் அணிந்துக் கொண்டு பார்க்கும் விளையாட்டு ஒன்று இருக்கும். கண்ணை மட்டும் கவர் செய்யும் அதை எடுத்து மாட்டிக்கொண்டவுடன் 3-டி இமேஜில் நீங்கள் உயரமான கட்டடத்தின் மீது இருப்பீர்கள் அல்லது மலைமீது கயிறுகட்டி அதன் மீது இருப்பீர்கள். நீங்கள் அதன் மீது நடப்பதுபோல் அந்த உலகத்தில் இருப்பீர்கள், நிஜத்தில் இங்கு சாதாரண தரையில் நடப்பீர்கள், ஆனால் திரையில் காணும் காட்சியால் நீங்கள் அங்கு போனதுபோன்ற உணர்வு இருக்கும் அதுதான் மெடாவெர்சின் கடுகளவு வெர்ஷன்.

     அவதார் படம் பார்த்தீர்களா?

    அவதார் படம் பார்த்தீர்களா?

    மலையளவு வெர்ஷன் பற்றி அறியவேண்டுமானால் அவதார் படத்தை உதாரணமாக சொல்லலாம். அதில் ஒரு பெட்டிக்குள் படுத்தவுடன் வேறொரு மாய உலகத்தில் அவதாராக நுழைவார் ஹீரோ. அந்த உலகத்தில் ஏற்கெனவே அவதார்கள், மிருகங்கள், மரம், பூ, பறவைகள் என இருக்கும். தேவைப்படாதபோது ஹீரோ வெளியே வந்துவிடுவார். இதுதான் மெடாவெர்ஸின் சின்ன விளக்கம். ஆனால் மெடாவெர்ஸில் அவதார் போல அங்கு யாரும் இருக்க மாட்டார்கள். அது ஒரு செயற்கை உலகம், மெய்நிகர் உலகம். அந்த உலகத்தை பலர் படைக்க தொடங்கிவிட்டார்கள். விஆர்/ஏஆர் மூலம் நாம் உள்ளே நுழையலாம்.

     உங்களுக்கான மாய உலகில் நீங்கள் நுழையலாம், வீடு வாங்கலாம்

    உங்களுக்கான மாய உலகில் நீங்கள் நுழையலாம், வீடு வாங்கலாம்

    மெடாவில் நுழைய அந்த ஸ்பெஷல் கண்ணாடி வேண்டும். கண்ணாடியை அணிந்தால் நம் கண்முன் மெடா எனும் மாய உலகம் தோன்றும். அதில் நாம் விரும்பும் அவதாரம் எடுத்து வாழ ஆரம்பிக்கலாம். நாம் உடை, ஹேர் ஸ்டைல் உட்பட நமக்கு பிடித்தமான உருவத்தை தேர்வு செய்யலாம். நாம் தேர்வு செய்யும் நாம் நம்மைப்போன்று அங்கு உள்ளே நுழைந்தவர்களுடன் உரையாடலாம், நட்பு வளர்க்கலாம், கடலை போடலாம், காதலிக்கலாம்.

     அமெரிக்காவில் இருக்கும் உங்கள் மகனுடன் கை குலுக்கலாம், கட்டி அணைக்கலாம்

    அமெரிக்காவில் இருக்கும் உங்கள் மகனுடன் கை குலுக்கலாம், கட்டி அணைக்கலாம்

    உங்களுடன் உரையாடுபவர் எங்கோ ஒரு மூலையில் அவர் வீட்டில் இருப்பார். அது நமது பக்கத்து நகரமாக இருக்கலாம், வேறு நாடாக இருக்கலாம் அது ஒரு விஷயமே அல்ல. எங்கோ ஒரு மூலையில் கண்ணாடி அணிந்து உங்களுடன் அவர் பேசிக்கொன்டிருப்பார். நீங்களும் அபப்டியே. ஆனால் இதில் இருவரும் ஒருவரை ஒருவர் விர்ச்சுவலாக சந்திக்கலாம், கைகுலுக்கலாம், கிரிக்கெட் விளையாடலாம், கேரம் விளையாடலாம், விர்ச்சுவலாக என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

     மெடா எனும் மாய உலகம் நம்ப முடியாத தகவல்கள்

    மெடா எனும் மாய உலகம் நம்ப முடியாத தகவல்கள்

    மெடாவில் பிரபலங்களும் வருவார்கள், அவர்களும் இருப்பார்கள். அரசியல் கட்சி தலைவர்கள் மெடாவில் பொதுக்கூட்டமே நடத்துவார்கள், தேர்தல் பிரச்சாரம் நடத்தலாம். வீட்டிலிருந்துக்கொண்டே நமது விச்சுவல் இமேஜ் மூலம் மெடா உலகில் கல்லூரியில் சேர்ந்து படிக்கலாம், நாமே கோர்ஸ் எடுக்கலாம். மெடாவில் வீடு கூட வாங்கலாம். வேலை செய்யலாம். நிஜவாழ்வில் செய்யும் பல விசயங்களை மெடாவில் அவதார் வடிவில் செய்யலாம்.

     நிழல் செய்யும் மாயாஜாலம்...நிஜம் சும்மா இருக்கும்

    நிழல் செய்யும் மாயாஜாலம்...நிஜம் சும்மா இருக்கும்

    நிஜத்தில் நீங்கள் உங்கள் அறையில் கண்ணாடியை அணிந்துகொண்டு உட்கார்ந்துகொன்டிருப்பீர்கள். மெடாவில் உங்கள் அவதார் ஒரு கோவிலிலோ, சர்ச்சிலோ, பள்ளிவாசலிலோ வேண்டுதலை செய்துக்கொண்டிருக்கும், யாருடனாவது டென்னிஸ் ஆடிக்கொண்டிருக்கும், இதேப்போன்ற மெடா உலகில் திருமண விழாவில், பிறந்த நாள் விழாவில் ஏன் துக்க விழாவில் கூட கலந்துக்கொள்ளலாம். இதில் இன்னொரு விஷயம் மெடா உலகில் மறைந்துப்போன தலைவர்கள் டிஜிட்டல் உருவத்தில் தோன்றி உங்களிடம் பேசிவார்கள், முன்னோர்கள் நேரில் ஆசி வழங்குவார்கள். அனைத்தும் விர்ச்சுவலாக நடக்கும்.

     சுஜாதா கதைபோல்....

    சுஜாதா கதைபோல்....

    சுருங்கச் சொன்னால் சுஜாதா கதை போன்றது. கற்பனை குதிரையை அவிழ்த்து விட்டால் அது எங்கெல்லாம் போய் வருமோ அதுபோல் மெடா எனும் உலகில் விஆர்/ஏஆர் கண்ணாடி மூலம் சஞ்சரித்து நிஜ அனுபவத்தை உணரலாம். இமய மலைக்கு போகலாம், அமேசான் காடுகளில் உலாவலாம். இந்த மெய்நிகர் உலகில் இதெல்லாம் சாத்தியம். அனைத்தையும் வீட்டிலிருந்து உணர்வு பூர்வமாக அனுபவிக்கலாம்.

     வீடியோ கேம் அல்ல ஒவ்வொருவர் வாழ்க்கையுடன் விளையாடப்போகும் டெக்னாலஜி

    வீடியோ கேம் அல்ல ஒவ்வொருவர் வாழ்க்கையுடன் விளையாடப்போகும் டெக்னாலஜி

    இது ஏதோ வீடியோகேம் என நினைக்கவேண்டாம். இனிமேல் இதுதான் வருங்கால இணையம். பேஸ்புக், ஆப்பிள் எல்லாமே இதில் குதிக்க ஆரம்பித்துவிட்டார்கள். மெடாவில் ஸ்னூப் டாக் (Snoop Dog) என்கிற பிரபலம் ஒருவர் நுழைந்து ஒரு வீட்டை வாங்கினார். அவரது வீட்டுக்கு அருகே இருக்கும் அடுத்தடுத்த 3 பிளாட்கள் மொத்தம் 12.3 மில்லியன் டாலர்கள் விலை போனது. ஐந்து லட்சம் என்பது நிஜமான பணம் கொடுத்து வாங்குவதுதான். இன்னும் வாங்கிக்கொண்டிருக்கிறார்கள். கிரிப்டோ கரன்சி போல் இதுவும் மாறி வருகிறது. அதைகொடுத்து மெடா உலகில் இடம் வாங்கியுள்ளார்கள்.

     இந்த டெக்னாலஜியை யோசித்தால் தலை சுற்றும் ஆனால் உண்மை

    இந்த டெக்னாலஜியை யோசித்தால் தலை சுற்றும் ஆனால் உண்மை

    மெடாவெர்ஸ் உலகில் திருமண விழா நடத்துவது நமது சென்னை வரை வந்துவிட்டது. அதாவது கொரோனா போன்ற காலம், ஊரடங்கால் பலரும் திருமணத்திற்கு வர முடியாத நிலை உள்ளது, பலர் வெளியூரில், வெளிநாடுகளில் இருப்பார்கள் வர இயலாது, வந்தாலும் செலவு. ஆனால் மெடாவெர்ஸ் வெட்டிங் இதை எளிதாக்கிவிடுகிறது. இதில் 2500 பேர்வரை அழைக்க முடியுமாம். இதன் மூலம் அழைப்பை பெற்றவர்கள் குறிப்பிட்ட நாளில் அவரது வீட்டிலிருந்து விஆர்/ஏஆர் கண்ணாடி மூலம் இந்த மெடா உலகில் அவர்கள் கல்யாண நிகழ்ச்சிக்குள் நுழையலாம்.

     இறந்து போனவர்களையும் சந்திக்கலாம்

    இறந்து போனவர்களையும் சந்திக்கலாம்

    உங்களுக்கான உருவத்தை அழகான ஆடை, அலங்கார்த்துடன் உருவாக்கி உள்ளே போகலாம், அங்கு அமெரிக்காவில் இருக்கும் உங்கள் மாமா இதேபோல் வந்திருப்பார் அவருடன் நீங்கள் கைகுலுக்கி உரையாடலாம். யாராவது ஒரு பிரபலம் திருமணத்திற்கு வருவார் அவருடன் பேசலாம். உங்கள் வாழ்த்தை மணமக்களுக்கு சொல்லலாம். இறந்துபோன உறவினரை டிஜிட்டல் வடிவில் நிறுத்தி உங்களை வரவேற்க, மணமக்களுக்கு ஆசி கூற வைக்கலாம். இதுபோன்ற திருமணம் அடுத்த மாதம் சென்னையில் நடக்க உள்ளது.

     மெடாவெர்ஸை நோக்கி நகரும் ஹாலிவுட், விளையாட்டு பிரபலங்கள்

    மெடாவெர்ஸை நோக்கி நகரும் ஹாலிவுட், விளையாட்டு பிரபலங்கள்

    மெடாவெர்ஸ் உலகில் இப்போதே அவரவர் தனித்தனி உலகை உருவாக்க ஆரம்பித்துவிட்டார்கள். இது எப்படி என்றால் பால்வெளியில் பல கிரகங்கள் உள்ளதுபோல் கற்பனை செய்துக்கொள்ளுங்கள். இதெல்லாம் எப்போது இந்தியாவுக்குள் வரும், நம்ம ஊருக்கு வரும் என்று கேட்கலாம். இந்தியாவுக்குள் வந்துவிட்டது. ஃபேஸ்புக்கும் மெடா வெர்ஷன் தொடங்கிவிட்டார்கள். வெகு சில ஆண்டுகளில் உலகில் எங்கோ ஒரு மூலையில் உள்ள உங்கள் முக நூல் நண்பர்களுடன் நீங்கள் விர்ச்சுவலாக நேரில் பேசி மகிழலாம்.

     மனித உறவுகள் மலருமா...பாதிக்கப்படுமா?

    மனித உறவுகள் மலருமா...பாதிக்கப்படுமா?

    செல்போன் மனிதனை பாதி சோம்பேறியாக்கியது என்றால் மெடாமெர்ஸ் என்னவாக ஆக்கப்போகிறதோ தெரியவில்லை. ஒரு வீட்டுக்குள் இருக்கும் 3 பேர் ஒருவர் ஐரோப்பாவில் கோல்ப் விளையாடிக்கொண்டிருப்பார், ஒருவர் தனக்குப் பிடித்த காசியாத்திரையில் ஐக்கியமாகியிருப்பார், ஒருவர் அமெரிக்காவில் தனது உறவினர்களுடன் அவர்கள் வீட்டில் இருப்பார். ஆனால் அனைவரும் வீட்டின் ஒரு இடத்தில் தான் இருப்பார்கள். இது உறவுகளை வளர்க்குமா? அல்லது முடக்குமா? அறிவை வளர்க்குமா? முடக்குமா என்றெல்லாம் சொல்ல முடியாது.

     உலகின் எல்லையை சுருக்கும் டெக்னாலஜியை விளக்கும் படங்கள்

    உலகின் எல்லையை சுருக்கும் டெக்னாலஜியை விளக்கும் படங்கள்

    விஞ்ஞான வளர்ச்சிகளை நாம் எப்படி பயன்படுத்த போகிறோம் என்பதில்தான் நம் மகிழ்ச்சி, வாழ்க்கை அனைத்தும் உள்ளது. இது உலகின் எல்லையை சுருக்கிவிடும் என்பது மட்டும் உண்மை. இதுகுறித்து இவ்வளவு விஷயங்களை திரைப்படமாக பலர் எடுத்துள்ளனர். அதில் சில படங்களின் பெயர்களை பார்ப்போம். ஆனால் அவைகள் இதுபோன்ற டெக்னாலஜியின் ஏதோ ஒரு வடிவத்தை பேசும். சில படங்கள் அந்த டெக்னாலஜியையே விளக்கி இருக்கும்.

     ஜுமான்ஜி ஹாலிவுட் மல்யுத்த வீரர் ராக் நடித்த படம் Jumanji next level (ROCK)

    ஜுமான்ஜி ஹாலிவுட் மல்யுத்த வீரர் ராக் நடித்த படம் Jumanji next level (ROCK)

    1.Jumanji next level (ROCK) (Amazon Prime) 2017 ஆம் ஆண்டு வெளியான படம். ரா புகழ் ராக் நடித்த படம். 4 சிறுவர்கள் பள்ளியை விட்டு வெளியேற்றப்பட்ட நிலையில் கேம் போர்டு ஒன்றை வைத்து விளையாடும்போது கேமுக்குள் போய்விடுவார்கள். அதற்குள் ராக் உள்ளிட்ட பலர் விர்ச்சுவல் இமேஜாக இருப்பார்கள், சிறுவர்கள் அந்த கேரக்டராக மாறி விளையாடுவார்கள். அந்த கேமை வென்றால் தான் நிஜ உலகிற்கு வர முடியும் என்பதுபோன்ற கதை. இது கிட்டதட்ட மெட்வெர்ஸ் போன்ற ஒன்றுதான். ஓடிடி தளத்தில் இந்தப்படம் அமேசான் பிரைமில் உள்ளது.

     மேட்ரிக்ஸ் வரிசை 4 படங்கள்..Matrix (series) 4 movies

    மேட்ரிக்ஸ் வரிசை 4 படங்கள்..Matrix (series) 4 movies

    2. Matrix (series) 4 movies (Netflix, Prime) கியானோ ரீவ்ஸ் நடித்த மேட்ரிக்ஸ் படங்கள் அனைத்துமே மெடாவெர்ஸ் ரக படங்கள் தான். வேறு உலகத்திற்கு சென்று வில்லன்களுடன் மோதும் படங்கள். இந்தப்படங்களின் கிராபிக்ஸ் காட்சிகள் பார்ப்போரை பிரமிக்க வைத்துள்ளது. இது நெட்ஃபிலிக்ஸ், அமேசான் ப்ரைம் இரண்டிலும் உள்ளது. புதிய படம் கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியானது இதுவரை ஓடிடி தளத்தில் வெளியாகவில்லை.

     ட்ரான் மூவி 2 படங்கள் - TRON

    ட்ரான் மூவி 2 படங்கள் - TRON

    3.TRON (Disney plus Hotstar) இரண்டு படங்கள் 1996 ஆம் ஆண்டும், 2010 ஆம் ஆண்டும் வெளியானது. ஒரு சாஃப்ட்வேர் புரோகிராமர் விர்ச்சுவல் உலகத்திற்குள் சென்று மெட்டாவேர் வில்லனை தோற்கடிப்பதுதான் கதை, இரண்டாம் பாகத்தில் காணாமல் போன தந்தையை தேடிப்போய் கண்டுபிடிக்கும் கதை ஆகும். ஓடிடி தளத்தில் இது டிஸ்னி ஹாட்ஸ்டாரில் உள்ளது.

     கேமர் மூவி Gamer

    கேமர் மூவி Gamer

    4. Gamer (Amazon prime)- 2009 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் ஹீரோ கேரக்டர் பெயர் கேபிள். அவர் நிபுணராக இருப்பவர். அவர் மூளையில் சிப் வைத்து கேம் விளையாடுவார்கள். திடீரென அதிலிருந்து மீளும் ஹீரோவும், விர்ச்சுவல் உலகத்தில் இருக்கும் சிறுவனுடன் சேர்ந்து தப்பிப்பதே கதை.

     அவதார் மூவி AVTAR- ஜேம்ஸ் காமரூன் இயக்கம்

    அவதார் மூவி AVTAR- ஜேம்ஸ் காமரூன் இயக்கம்

    5. AVTAR (Disney plus Hotstar)- 2009 - james camaron இந்தப்படம் டைட்டானிக் படத்தை எடுத்த ஜேம்ஸ் கேமரானின் மிகப்பெரிய ப்ராஜக்ட் படம். 3 ஆஸ்கார் அவார்டுகளை தட்டிச் சென்ற படம். மாற்றுத்திறனாளியான் ஹீரோ விர்ச்சுவல் உலகத்தில் அவதார்களுடன் ஆணழகனான அவதாராக இருப்பார். பின்னர் அவதார்களுடன் சேர்ந்து அதை அழிக்க வரும் வில்லன்களிடமிருந்து காப்பார். இந்தப்படம் ஓடிடி தளத்தில் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் உள்ளது.

     Ready player one movie ரெடி பிளேயர் ஒன் -ஸ்பீல்பெர்க் மூவி

    Ready player one movie ரெடி பிளேயர் ஒன் -ஸ்பீல்பெர்க் மூவி

    6. Ready player one movie (Amazon Prime) 2018- Spielperg. சயின்ஸ் ஃபிக்‌ஷன் படங்களுக்கு பேர் போன ஸ்பீல் பர்க், விர்ச்சுவல் உலகத்தையும், மெடாவெர்ஸ் டெக்னாலஜியை மிக அழகாக படம் பிடித்து காட்டியிருப்பார் இந்தப்படத்தில். கதையில் ஒருவன் மெடாவெர்ஸை உருவாக்குவான். தான் இறப்பதற்கு முன் மூன்று சாவிகளை கண்டுபிடித்து வைத்து விட்டுச் செல்வார். ஹீரோ அதை கண்டுபிடித்து மெடாவர்ஸ்சுக்குள் நுழைந்து வெற்றிக்கொள்வதே கதை. இந்தப்படம் ஓடிடியில் அமேசான் பிரைமில் உள்ளது.

     இன்செப்ஷன் மூவி Inception

    இன்செப்ஷன் மூவி Inception

    7. Inception (Netflix and Amazon prime) 2010 Christoper Nolen - Dekarpio, டைட்டானி ஹீரோ டிகார்பியோ நடித்து வெளியான இந்தப்படம் கனவுலகில் தான் செய்ய நினைப்பதை அதற்குள் சென்று செய்வார். வங்கிக்கொள்ளை போன்றவைகள் எல்லாம் நடக்கும். கனவு கனவுக்குள் கனவு என படம் போகும். இந்தப்படம் ஓரளவு மெடாவெர்ஸ் டைப் போன்றது. இது ஓடிடி தளத்தில் நெட்ஃபிலிக்ஸிலும், அமேசான் ப்ரைமிலும் உள்ளது.

     ஸ்பேஸ் ஜாம் மூவி- Space jam-2

    ஸ்பேஸ் ஜாம் மூவி- Space jam-2

    8. Space jam-2 (Amazon Prime) 2021 அமெரிக்காவைச் சேர்ந்த உலகின் சிறந்த பேஸ்கட் பால் பிளேயர் லெபரான் ஜேம்ஸ் நடித்துள்ளார். அவரது மகனை கடத்தி விர்ச்சுவல் உலகத்தில் ஒளித்து வைத்து விடுவார்கள். அவர் அந்த உலகத்திற்குள் சென்று வில்லன் உருவாக்கி வைத்துள்ள பேஸ்கட்பால் டீமுடன் மோதி வென்று மகனை மீட்பார். இந்தப்படம் ஓடிடி தளத்தில் அமேசான் ப்ரைமில் உள்ளது.

     பப்ஜி கேம் மெடாவெர்ஸ் வடிவமே

    பப்ஜி கேம் மெடாவெர்ஸ் வடிவமே

    9. பப்ஜி கேம் இதுவும் ஒருவகையில் மெடாவெர்ஸ் போன்றதுதான் அதற்குள் சென்று நீங்கள் விளையாடுவீர்கள். ஆனால் மெடாவெர்ஸ் போன்று விர்ச்சுவலாக சொந்த பந்தங்களுடன் பழக முடியாது. சில நேரம் இரண்டு , மூன்று பேர் நுழைந்து விளையாடலாம். இதுபோன்று பல விளையாட்டுகள் உள்ளன. அவை அனைத்தும் மெடாவெர்ஸின் வடிவங்களே.

     மெடாவெர்ஸ் விர்ச்சுவல் உலகை படைக்க துடிக்கும் பெரும் நிறுவனங்கள்

    மெடாவெர்ஸ் விர்ச்சுவல் உலகை படைக்க துடிக்கும் பெரும் நிறுவனங்கள்

    முக்கியமான நிறுவனங்கள் விஆர்/எஆர் தயாரிப்பில் இறங்கியுள்ளன. பலர் விர்ச்சுவல் உலகத்தை உருவாக்குகிறார்கள். இதற்கான ஸ்பேஸ் வாங்குவதான் செலவு, அதை நிரந்தரமாகவும், வாடகைக்கும் விடுவார்கள். பலர் சொந்தமாக வாங்கி பிறருக்கும் விற்பார்கள். சொல்லப்போனால் இது ஒருவகை ரியல் எஸ்டேட் பிஸ்னெஸ் போலத்தான் ஆனால் உலகலாவிய அளவில் இருக்கும். சில விஷயங்களை இப்போது கற்பனை செய்யவேண்டாம் பிறகு போகப்போக தானாக புரியும்.

    English summary
    'Meta Verse': List of Movies that speak to the virtual world
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X