twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தியாகத்தையும், உண்மையையும் நேர்த்தியாக சொல்லும் படம் ... மேதகு !

    |

    சென்னை : சினிமா எனும் மாயத்திரை மூலம் பல செல்லுலாய்டு கனவுகளுடன் பல விதமான படைப்புக்களை பல படைப்பாளிகள் , தங்களது வாழ்க்கை முறை கடந்து வந்த பாதை என்று கற்பனை செய்து திரைக்கதை அமைத்து மக்களை மகிழ்விக்கின்றனர் . சில படங்கள் உலக தரமானதாக பார்க்க படுவதும் சில படங்கள் வெறுமனே பொழுதுபோக்காக பார்ப்பதும் நாம் அன்றாடம் பார்த்து வருகிறோம்.

    2016ல் அமெரிக்காவில் இருந்து வெளிவரும் பழமையான வார இதழான "The Nation" என்ற பத்திரிக்கை ஒரு திரைப்படத்தை பற்றி கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டு எழுதி இருந்து. "An epic motion picture, it will introduce general audiences to a tragic chapter of history "

    அந்தப்படம் 'The Promise'. 2016ல் அயர்லாந்தைச் சார்ந்த இயக்குனர் Terry George அவர்களால் எடுக்கப்பட்டு,கனடாவிலும், அமெரிக்காவிலும் வெளியிடப்பட்டது. அப்படம் தான் ஆர்மேனிய இனப்படுகொலையைத் தழுவி எடுக்கப்பட்டு, அவ்வினத்தின் வலியை, வெளியுலகிற்கு கொண்டுவந்த முதல் உலகத்தர திரைப்படமாகும்.

    பணம் மீது எங்கள் நோக்கம்

    பணம் மீது எங்கள் நோக்கம்

    ஆர்மேனிய அகதிகளாக வந்தவர்களான MGM Grand casino முன்னாள் முதலாளி Kerkorian மற்றும் ஆர்மேனிய அகதிகளின் வழிவந்த அமெரிக்கா வாழ் மருத்துவரான Eric Esrailian இருவர்கள்தான் இந்தத் திரைப்படத்தை எடுத்தவர்கள். பல சிரமங்களுக்கு மத்தியில்,இத்திரைப்படத்திற்கு $90 மில்லியன்களுக்கு மேல் செலவு செய்து எடுத்திருந்தனர், ஆனால் 12 மில்லியன்களே பட வசூலானது, ஆகவே $100 மில்லியன் இழப்பை பட நிறுவனத்திற்கு ஏற்படுத்தி இருந்தது. ஆனாலும், "எங்கள் நோக்கம், எங்கள் வலியையும், வரலாற்றையும் பதிவு செய்வதே தவிர, பணம் எங்கள் நோக்கமல்ல" என அறிவித்தனர்.

    உணர்வுப்பூர்வமான

    உணர்வுப்பூர்வமான

    அதே போன்று புகழ்பெற்ற Jurassic Park படத்தை எடுத்தவர், அமெரிக்க திரைப்பட இயக்குனர் Steven Spielberg என்பது அனைவரும் அறிந்ததே. அதே இயக்குனர் schindler's list" எனும் திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். அது யூத இன அழிப்பை வெளிக்கொண்டு வந்த திரைப்படமாகும்.மேலும் இந்த திரைப்படத்தை இயக்கிய Spielbergக்கே ஒரு யூதர் என்பதால், அவ்வினத்தின் துயரம் தாங்கிய வரலாற்றை துல்லியமாகவும், உணர்வுப்பூர்வமான வகையிலும் உலக அரங்கில் பதிவு செய்துள்ளார்.

    உண்மையையும் வெளிக்கொண்டு

    உண்மையையும் வெளிக்கொண்டு

    மேற்கூறிய அனைத்து படங்களுமே, இனப்படுகொலை உச்சம் பெற்று பல தலைமுறைகள் கடந்த பின்னர், அவர்கள் வழிவந்தவர்கள் வரலாற்றை மறக்காமல் இருப்பதற்காக, இனப்பற்று கொண்டவர்களால், பொருளாதார பலம்பொருந்தியவர்கள் உதவியோடு உருவாக்கப்பட்டது. அது போலவே, இன்றும் உலகம் முழுவதும் பல்வேறு அறிவு சார் தளத்தில் போராடி வரும் 12 கோடி தமிழ் உறவுகளின் கரங்களை வலுப்படுத்தும் விதமாக "மேதகு" எனும் படம் எடுக்கப்பட்டுள்ளது. பேரினவாதத்தை எதிர்த்து போராட்டத்தை நடத்திய மக்களின் நியாயத்தையும், தியாகத்தையும், உண்மையையும் வெளிக்கொண்டு வந்துள்ளது.

    ஒருமுறையேனும் பார்த்தால்

    ஒருமுறையேனும் பார்த்தால்

    தமிழ் இனத்தின் பல ஆண்டு வீரம் செறிந்த போராட்டங்கள், இலட்சக்கணக்கான உயிர்த்தியாகங்கள், உணர்வாளர்களின் உளமார்ந்த உதவிகள், இன்றும் தொடரும் உரிமைப்போராட்டங்கள், ஆகியவற்றை உள்ளடக்கிய வரலாற்றை தமிழ் திரையுலகின் நட்சத்திர இயக்குனர்களே படமாக்கத் தயங்கி நின்று, தவிர்க்கப்பட்டு வந்த நிலையில், கிட்டு என்ற இளைஞர், மேதகு என்னும் தலைவரின் இளமை கால வரலாற்றை படமாக்கியுள்ளார். எல்லாளன் , பொய்யாவிளக்கு என்னும் திரைப்படங்களைப் போன்று உண்மைச்சம்பவங்களை மட்டுமே மையமாக வைத்து உருவாக்கியுள்ளனர்.இதனை அனைத்து தமிழ் உறவுகளும் ஒருமுறையேனும் பார்த்தால், எதிர்கால தமிழின வரலாறு மாற்றி எழுதப்பட வாய்ப்பு உள்ளது என்று பலரும் தொடர்ந்து சொல்லி வருகின்றனர் .

    ஒட்டு மொத்த குழுவும்

    ஒட்டு மொத்த குழுவும்

    உண்மை சம்பவங்களை தத்ரூபமாக காட்டுவது சில இயக்குர்களால் மட்டுமே முடியும். சில நேரங்களில் உண்மை மிகவும் கசக்கும் காரணம் அது உண்மை என்பதினாலேயே . ஆதலால் கேமரா நேர்த்தி , உண்மையான லொகேஷன்ஸ் மக்களுக்கு புரியும் விதம் எளிமையாக சொல்லப்படும் திரைக்கதை என்று இந்த மேதகு படத்தை ஒட்டு மொத்த குழுவும் சேர்ந்து மிகவும் மெனக்கெட்டு செய்திருக்கிறார்கள் . பல கமெற்சியல் படங்களுக்கு நடுவே இப்படி பட்ட படங்களுக்கும் மக்கள் அங்கீகாரம் கொடுக்க வேண்டும் , விருதுகள் அலங்கரிக்க வேண்டும் என்பது தான் அனைவரது ஆசையும். பொறுத்து இருந்து பார்ப்போம் "மேதகு" மென்மையானவன் மேன்மையானவன் என்று உலகத்திற்கு உணர்த்தும் வரை.

    English summary
    ''Methagu'' film tells the story of sacrifice and truth
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X