அய்யோ கடவுளே.. 28 வயசுல இப்படி ஒரு சாவா? இசையமைப்பாளர் திடீர் மரணம்!

சென்னை: வளர்ந்து வரும் இளம் இசையமைப்பாளரான பிரவீன் குமார் உடல்நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 28. அவரின் இறுதிச்சடங்கு தஞ்சாவூரில் இன்று மாலை 6 மணியளவில் வடக்கு வாசலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற உள்ளது.

2021 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு, முதன்முறையாக, மேதகு என்கிற பெயரில் முழு நீளத் திரைப்படமாக வெளியானது. தமீழழத் திரைக்களம் சார்பில், பொறியாளரும், தமிழ் உணர்வாளருமான கிட்டு இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். பிரபாகரனின் பிறப்பு முதல் அவரின் முதல் புரட்சிகர அமைப்பான புதிய தமிழ்ப்புலிகள் உருவான காரணம் வரை, இந்த முதல் பாகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. தமிழ் உணர்வாளர்கள், ஈழ ஆதரவாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற இந்த படத்தில், தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்த மணிகண்டனுக்கு உலகெங்குமிருந்து பாராட்டு குவிந்தன.

Methagu movie music director praveen kumar passed away

இசையமைப்பாளர் பிரபீன் குமார்: மேதகு படத்திற்கு இசையமைத்த பிரவீன் குமார் மே 2ஆம் தேதி அதிகாலை 6 மணியளவில் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது திடீர் மரணம் தமிழ் திரையுலகினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரவீன் குமாருக்கு தமிழ் திரைத்துறையினர் தங்கள் இரங்கலைத் இணையத்தின் வாயிலாக தெரிவித்து வருகிறார்கள்.

28 வயதில் மரணம்: வளர்ந்து வரும் இசையமைப்பாளரான பிரவீன் குமாருக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டதை அடுத்து, நேற்று மதியம் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். ஆனால் இவருக்கு என்ன உடல் ரீதியான பிரச்சனை என்று தெரியவில்லை.

இன்று இறுதிச்சடங்கு: பிரவீன் குமாரின் உடல் அம்புலன்ஸ் மூலம் அவரின் சொந்த ஊரான தஞ்சாவூருக்கு எடுத்துச்செல்லப்பட்டது. இதையடுத்து இன்று மாலை 6 மணியளவில் வடக்கு வாசல் உள்ள அவரது இல்லத்தில் இறுதிச்சடங்கு நடைபெற இருப்பதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 28 வயதே ஆன இசையமைப்பாளர் பிரவீன் குமார் உயிரிழந்துள்ளது திரையுலகினர் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் தீராத சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Read more about: death methagu மரணம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X