twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    2018ல் இன்ஸ்டாகிராமில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் எது தெரியுமா?

    By Siva
    |

    சென்னை: 2018ம் ஆண்டு இன்ஸ்டாகிராமில் இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட அட்வகேசி ஹேஷ்டேக்(advocacy hashtag) #MeToo தான்.

    2018ம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ளது. இந்த ஆண்டு பாலிவுட்டை மட்டும் அல்ல பல துறைகளையும் அதிர வைத்தது மீ டூ இயக்கம். அட இந்த ஆளா இப்படி செய்தார் என்று வியக்கும்படி சில பிரபலங்கள் கூட சிக்கினார்கள்.

    பாலியல் தொல்லைக்கு ஆளானவர்கள் #MeToo என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தினார்கள்.

    சமூக வலைதளம்

    சமூக வலைதளம்

    பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் அல்ல பாலியல் தொல்லை குறித்து சமூக வலைதளங்களில் விவாதித்தவர்களும் #MeToo என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தினார்கள். இந்நிலையில் இந்த ஆண்டு இன்ஸ்டாகிராமில் அதிகம் பயன்படுத்தப்பட்ட அட்வகேசி ஹேஷ்டேக்(advocacy hashtag) எதுவென்று பார்த்தால் அது #MeToo தான்.

    ஹேஷ்டேக்

    ஹேஷ்டேக்

    2018ம் ஆண்டு 1.5 மில்லியன் முறை #MeToo என்ற ஹேஷ்டேக்கை இன்ஸ்டாகிராமில் பயன்படுத்தியுள்ளனர். #timesup என்ற ஹேஷ்டேக் 5 லட்சத்து 97 ஆயிரம் முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து #marchforourlives என்ற ஹேஷ்டேக் 5 லட்சத்து 62 ஆயிரம் முறை இன்ஸ்டாகிராமில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    மக்கள்

    மக்கள்

    இன்ஸ்டாகிராமில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் என்றால் அது #love. அதன் பிறகு #instagood, #fashion ஆகிய ஹேஷ்டேகுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. #lovequotes என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறதாம்.

    பயம்

    பயம்

    #MeToo என்று கூறி பாலியல் புகார் தெரிவித்த பெண்களின் தைரியத்தை பலர் பாராட்டியுள்ளனர். ஆனால் அப்படி புகார் தெரிவித்த பிறகு தங்களின் கெரியர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த பெண்கள் தெரிவித்துள்ளனர். இதை பார்த்துவிட்டு பாதிக்கப்பட்ட பெண்கள் துணிந்து வெளியே சொல்ல பயப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    #MeToo is the most used advocacy hashtag on instagram in the year 2018.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X