Metti Oli Dhanam - விஜய்க்கு ஹீரோயினா நடிக்க வேண்டியது.. ரொம்ப டிப்ரெஷன்.. மெட்டி ஒலி தனத்தின் சோக பக்கங்கள்
சென்னை: Kaver (காவேரி) மெட்டி ஒலியில் தனம் கேரக்டரில் நடித்து புகழ் பெற்ற காவேரியின் பேட்டி இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் காவேரி. அந்தப் படம் மெகா ஹிட்டானதை அடுத்து உன்னை நான் வாழ்த்துகிறேன், பந்தய குதிரைகள்,போக்கிரி தம்பி உள்ளிட்ட படங்களில் நடித்தார். விஜயகாந்த் நடித்து மெகா ஹிட்டான சேதுபதி ஐபிஎஸ் படத்திலும் ஒரு கேரக்டரில் நடித்திருந்தார். பிறகு பட வாய்ப்புகள் ஏதும் அமையாத சூழலில் சீரியலுக்குள் வந்தார்.

சீரியல்கள்: அதன்படி தெலுங்கில் சினேகா, அந்தாரங்கலு ஆகிய சீரியல்களில் நடித்த அவர் தமிழில் அந்த ஒரு நிமிஷம் என்ற சீரியலின் மூலம் அறிமுகமானார். பிறகு பஞ்சவர்ணகிளி, ஆனந்த பவன் உள்ளிட்ட சீரியல்களில் நடித்த காவேரி திருமுருகன் இயக்கத்தில் உருவான மெட்டி ஒலி சீரியலில் தனம் கேரக்டரில் நடித்தார்
மெகா ஹிட்: அந்த சீரியல் மொத்தம் 811 எபிசோடுகள் ஓடியது. சீரியல் மெகா ஹிட்டடித்தது. தனம் கேரக்டரும் ரொம்பவே ஃபேமஸ் ஆனது. அதன் பிறகு ருத்ரவீணை, அரசி, மலர்கள், கஸ்தூரி, தங்கம், மீரா என ஏகப்பட்ட சீரியல்களில் நடித்த அவர் கடைசியாக சன் டிவியில் ஒளிபரப்பான வம்சம் சீரியலில் நடித்தார். அதன் பிறகு ஒட்டுமொத்தமாக காணாமல் போனார்.
காவேரி பேட்டி: இந்நிலையில் நடிகை காவேரி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அவர் அளித்த பேட்டியில், "வம்சம் சீரியல் செய்துகொண்டிருந்தபோது எனது அம்மா இறந்துவிட்டார். நான் ரொம்பவே டிப்ரெஷனுக்குள் சென்றுவிட்டேன். தைராய்டு வேறு இருந்தது. அதனால் உடல் எடையும் கூடியது. சில மருந்துகள் கொடுத்தார்கள். அதை ஒரு மாதம் நிறுத்தியிருந்தேன். அந்த சமயத்தில் 8 கிலோ உடை குறைந்தேன்.
அப்படியே விட்டுட்டேன்: உடனே அந்த மருந்துகளை எடுப்பதை நிறுத்திவிட்டேன். எனக்கு வீட்டுக்குள்ளேயே இருக்கத்தான் பிடிக்கும். கிருஷ்ணகிரி பக்கத்தில் ஒரு பண்ணை வீடு வாங்கியிருக்கிறோம். அங்குதான் இருக்கிறோம். சென்னைக்கு ஒரு வேலையாக வந்தோம். ஆனால் இங்கேயே ஒன்றரை வருடங்கள் தங்க வேண்டிய சூழலாக அமைந்துவிட்டது.
சினிமா என்ட்ரி: சீரியல்களில் நடிக்க எனக்கு ஆசையில்லை. விஜய் சேதுபதி, நயன்தாரா, விஜய் ஆண்டனி, சமுத்திரகனி உள்ளிட்டோருடனும் பணியாற்ற வேண்டும் என்று ஆசை. எந்த கேரக்டராக இருந்தாலும் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. எனது குடும்பமும் சினிமா குடும்பம்தான். டிரம்ஸ் சிவமணி எனது அப்பாவின் மாணவர். ஆரம்பத்தில் நான் சினிமாவில் நடிப்பதற்கு குடும்பத்தில் விருப்பம் இல்லை. பிறகு எப்படியோ ஒத்துக்கொண்டார்கள். வைகாசி பொறந்தாச்சு படத்துக்கு பிறகு விஜய்க்கு ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால் அது சில காரணங்களால் நடக்காமல் போய்விட்டது" என்றார்.


Click it and Unblock the Notifications











