Aravind Swamy: அரவிந்த்சாமியின் அப்பா நான் தான்… உண்மையை உடைத்த சீரியல் நடிகர்!

சென்னை: நடிகர் அரவிந்த்சாமியின் அப்பா நான் தான் என்று சீரியல் நடிகர் டெல்லி குமார் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

90ஸ் இளம் பெண்களின் தூக்கத்தை கெடுத்த காதல் மன்னன் தான் அரவிந்த் சாமி.

அந்த காலகட்டத்தில் திருமண வயதை எட்டிய பெண்கள் அரவிந்த்சாமி போல கணவர் வேண்டும் என்று பெற்றோரை நச்சரித்த கதையும் உண்டு.

Metti oli serial actor Delhi Kumar is the father of Aravind Swamy

அரவிந்த்சாமி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தளபதி படத்தில் கலெக்டராக ஒரு சில காட்சியில் வந்தாலும் யாருப்பா இந்த பையன் சும்மா மைதா மாவு போல இருக்கிறான் என்று கோலிவுட் வட்டாரமே வியந்து பார்த்தது. முதல் படத்திலேயே கவனிக்கப்படும் நடிகராக மாறிய அரவிந்த்சாமி, ரோஜா படத்தில் காதல் ரசம் சொட்ட சொட்ட நடித்திருந்தார்.

வில்லனாக ரீ என்ட்ரி: அதன்பின் பல ஹிட் திரைப்படங்களில் நடித்த அரவிந்த்சாமி, விபத்து ஒன்றில் சிக்கி ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போனார். அதன்பின், தொடர்ந்து உடற்பயிற்சி செய்து மீண்டும் தனிஒருவன் படத்தில் வில்லனாக நடித்தார். இதுவரை ஹீரோவாக நடித்து வந்த அரவிந்த்சாமி ரீ என்ட்ரிக்கு பின் வில்லன் அவதாரம் எடுத்து அனைத்திலும் மாஸ் காட்டினார்.

Metti oli serial actor Delhi Kumar is the father of Aravind Swamy

டெல்லி குமார்: நடிகர் அரவிந்த்சாமி சினிமாவில் அறிமுகமான போதே அவர் சீரியல் நடிகர் டெல்லி குமாரின் மகன் என்று சொல்லப்பட்டது. ஆனால், அதை உறுதிப்படுத்தும் வகையில் எந்தவிதமான புகைப்படமோ, குடும்ப நிகழ்ச்சியில் கூட இருவரும் சேர்ந்து இருந்தது கிடையாது. இதனால், இது இத்தனை ஆண்டுகளாக உறுதிப்படுத்தப்படாத தகவலாக இருந்தது.

தத்து கொடுத்துவிட்டேன்: இந்நிலையில் சீரியல் நடிகர் டெல்லி குமார், ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், அரவிந்த்சாமி என் மகன் தான் என்றும், அவர் பிறந்ததுமே என் அக்காவுக்கு தத்து கொடுத்துவிட்டேன். குடும்பத்தில் ஏதாவது முக்கியமான நிகழ்ச்சி என்றால் மட்டுமே அவர் வீட்டுக்கு வருவார். வந்ததுமே சென்றுவிடுவார் இதனால், அடிக்கடி அவரை பார்க்க முடியாமல் போனது என்றார்.

Metti oli serial actor Delhi Kumar is the father of Aravind Swamy

மெட்லி ஒலி சீரியல்: மேலும், அவருடன் இணைந்து நடிப்பீர்களா என்ற கேள்விக்கு, கதையும், அதற்கான சூழ்நிலையும் அமைந்தால் நிச்சயம் நடிப்பேன். ஆனால், இதுவரை அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு வரவில்லை என்றார். குணச்சித்திர நடிகரான டெல்லி குமார் மெட்லி ஒலி சீரியலில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார் என்பது குறிப்பிடத்தகக்து.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X