தீபாவளிக்கு ரிலீஸாகும் 'மேயாத மான்' ட்ரெய்லர் இதோ!
சென்னை : இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பென்ச் சார்பாக, கார்த்திகேயன் சந்தானம் என்பவரோடு இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் 'மேயாத மான்'.
ரத்தின குமார் தான் இயக்கிய 'மது' என்கிற குறும்படத்தைத்தான் தற்போது 'மேயாத மான்' என்கிற படமாக இயக்கியுள்ளார். வைபவ், ப்ரியா பவானி சங்கர், விவேக் பிரசன்னா, இந்துஜா உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்தப் படம் சென்னை பின்னணியில் நடக்கும் காதல் கதையாக உருவாகியுள்ளது.
இந்தப் படம் விஜய் நடிக்கும் 'மெர்சல்' படத்தோடு வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்நிலையில், படத்தின் ட்ரெய்லரை சற்றுமுன்பு நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் அவரது நண்பரும் பாடகருமான பிரதீப் குமார் ஆகிய இருவரும் இணைந்து இசை அமைத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











