'யார் சொன்னா... தலைவரே சொல்டாரு!' - மேயாத மான் குழுவை குஷிப்படுத்திய ரஜினி

By Shankar

சென்னை: மேயாத மான் படத்தைப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த், படம் சிறப்பாக இருப்பதாகக் கூறி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வைபவ், ப்ரியா பவானி சங்கர், இந்துஜா நடிப்பில் அறிமுக இயக்குநர் ரத்ன குமார் இயக்கிய இப்படம் தீபாவளிக்கு வெளியானது. இந்தப் படத்தை கார்த்திக் சுப்பராஜ் தயாரித்திருந்தார்.

Meyatha Maan team happy over Rajini's praise

மெர்சல் என்ற பிரமாண்ட படம் வெளியானாலும், தங்கள் படம் மீதுள்ள நம்பிக்கை காரணமாக தீபாவளிக்கு தயங்காமல் வெளியிட்டனர்.

இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது.

இந்நிலையில், கார்த்திக் சுப்புராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில், நடிகர் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் நேற்று படத்தை பார்த்து ரசித்ததாகவும், 'மேயாத மான்' டீமை வெகுவாக பாராட்டியதாகவும் பதிவு செய்திருக்கிறார்.

அதனை 'யாரு சொன்னா.. தலைவரே சொல்டாரு' என்று குறிப்பிட்டு ட்விட் வெளியிட்டுள்ளார் கார்த்திக் சுப்பராஜ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X