மெய்யழகன் முதல் தேவாரா வரை.. இந்த வாரம் தியேட்டரில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்!

சென்னை: இந்த வாரம் வெள்ளிக்கிழமை கடைசி உலகப் போர், லப்பர் பந்து, நந்தன், தோனிமா, தோழர் சேகுவாரா, கோழிப்பண்ணை செல்லத்துரை என ஏழு திரைப்படங்கள் வெளியானது. அதே போல இந்த வாரமும் ஆறு திரைப்படம் வெளியாக உள்ளது. இதில் எந்த படம் பாக்ஸ் ஆபிசில் வசூலை அள்ளும் என்று பார்க்கலாம்.

மெய்யழகன்: பிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி த்ரிஷா நடித்து கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் '96'. இந்த திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. 96 படத்திற்கு பின் 6 ஆண்டுகள் கழித்து இயக்குநர் பிரேம்குமார் இயக்கி உள்ள திரைப்படம் மெய்யழகன். இப்படத்தில், நடிகர் கார்த்தி, நடிகர் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் போன்றோர் நடித்துள்ளனர். இப்படத்தின் இசைவெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் இப்படம் செப்டம்பர் 27ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது.

meyyazhagan devara theater release movie

தேவாரா: தெலுங்கு திரையுலகில் முக்கிய நடிகராக இருக்கும் ஜூனியர் NTR, தற்போது தேவாரா திரைப்படத்தில் நடித்துள்ளார். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தை கொரட்டலா சிவா இயக்கி உள்ளார். இந்தப் படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார். ஜான்வி கபூர் என்டிஆருக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும், சைப் அலி கான், பிரகாஷ் ராஜ், சைன் டாம் சக்கோ, ஸ்ரீ காந்த், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவசுதா ஆர்ட்ஸ் மற்றும் என். டி. ஆர் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படம் 27ந் தேதி வெளியாக உள்ளது.

பேட்ட ராப்: எஸ்.ஜே.சீனு இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் படம் பேட்ட ராப். இதில் வேதிகா நாயகியாக நடித்துள்ளனர். மேலும், ரியாஸ்கான், மைம் கோபி, பகவதி பெருமாள், ரமேஷ் திலக் உட்பட பலர் நடித்துள்ளனர். இமான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஜித்து தாமோதர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ப்ளு ஹில் பிலிம்ஸ் சார்பில் ஜோபி பி சாம் தயாரிக்கும் இந்தப் படத்தில் சன்னிலியோன் ஒரு பாடலுக்கு பிரபுதேவாவுடன் நடனமாடியுள்ளார். இந்தப் படம் செப்.27-ல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

ஹிட்லர்: விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி உள்ள ஹிட்லர் திரைப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ளது. படைவீரன், வானம் கொட்டட்டும் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய தனா இப்படத்தி இயக்கி உள்ளார். இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன், இயக்குநர் தமிழ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

சட்டம் என் கையில்: சதீஷ் நாயகனாக நடித்துள்ள 'சட்டம் என் கையில்' படம் வரும் 27ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது. மெரினா, வாகை சுடவா, தாண்டவம், எதிர்நீச்சல், கத்தி உள்ளிட்ட பல்வேறு படங்களின் மூலம் கவனம் பெற்றவர் சதீஷ். நாய் சேகர் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். தற்போது சட்டம் என் கையில் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இதில், சம்பதா, அஜய் ராஜ், பவல் நவகீதன், வித்யா பிரதீப், மைம் கோபி, ரித்விகா தமிழ்செல்வி, கஜராஜ், பாவா செல்லதுரை, ஆர். ராம்தாஸ், வெண்பா, ஜீவா ரவி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X