MGR: கண் போன போக்கிலே கால் போகலாமா.. ப்பா.. எம்ஜிஆர் மட்டும் இப்படி வந்தா.. பாக்ஸ் ஆபிஸ் பத்திக்குமே
சென்னை: ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் போட்டோக்களை தாண்டி தற்போது வீடியோக்களை உருவாக்கும் முயற்சியில் பலரும் ஈடுபட்டு வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்தின் இளம் வயது ஏஐ வீடியோ வெளியாகி டிரெண்டான நிலையில், தற்போது எம்ஜிஆரின் ஏஐ வீடியோ ஒன்று ரசிகர்களை அதிசயிக்க வைத்துள்ளது.
ஏஐ தொழில்நுட்பம் ஒரு பக்கம் அதிசயிக்க வைத்தாலும் இன்னொரு பக்கம் ஆபத்தையும் கொடுத்து வருவதால் அதனை எச்சரிக்கையாகவே பயன்படுத்த வேண்டும் என்கிற உள்ளுணர்வும் எழுந்துக் கொண்டே இருக்கிறது.

மறைந்த பிரபலங்களை எல்லாம் இப்படி கண்முன்னே மீண்டும் கொண்டு வர ஏஐ பயன்படும் என்றால் அதை ரசிக்க மக்கள் தயாராகவே இருப்பார்கள்.
எம்ஜிஆர் 2.0: இந்நிலையில், எம்ஜிஆரை செம யங்காக கொண்டு வந்து காட்டி உள்ள புதிய ஏஐ வீடியோவை எம்ஜிஆர் ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து ரசித்து வருகின்றனர். "கண் போன போக்கிலே.. கால் போகலாமா" பாடலை அப்படியே எம்ஜிஆர் உயிரோடு வந்து பாடுவது போலவே கனகச்சிதமாக உள்ளது.
இப்படியொரு படம் வந்தால்: எம்ஜிஆரின் இந்த லுக்கில் கச்சிதமாக ஒரு ஏஐ படம் உருவாக்கப்பட்டு வெளியானால் வேறலெவல் இண்டஸ்ட்ரி ஹிட் அடிக்கும் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இம்சை அரசன்: இந்த தலை அந்த உடலோடு ஒட்டப் போகிறது என இம்சை அரசன் படத்தில் வரும் காமெடி போல ஏஐ மேஜிக்குகள் வேறு ஒரு நபரின் உடல் அமைப்பு மற்றும் அசைவுகளுடன் மறைந்த பிரபலங்கள் வீடியோக்களில் கொடுத்த முக பாவனைகளை சிங்க் செய்து புதிய வீடியோவாக வெளியிட்டு ஜித்து வேலை காட்டி வருகின்றனர்.
Throwback: Karunanidhi Saved Kamal Haasan's Film Director Who Played With MGR
ராஷ்மிகா மந்தனா சர்ச்சை: ஆனால், டீப் ஃபேக் என்கிற மோசமான விஷயத்துக்காக இதே ஏஐ தொழில்நுட்பத்தை மோசமாக பயன்படுத்தி வருகின்றனர். நடிகை ராஷ்மிகா மந்தனா, கஜோல் உள்ளிட்ட பல பிரபலங்கள் ஏஐ டீப் ஃபேக் வீடியோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











