என்றென்றும் எம்ஜிஆர்.. 37வது ஆண்டு நினைவு தினம்.. பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைத்த உலகம் சுற்றும் வாலிபன்!

சென்னை: புரட்சித் தலைவர், மக்கள் திலகம், பொன்மனச் செம்மல் என தமிழக மக்களால் இன்னமும் மறக்காமல் கொண்டாடப்படும் எம்.ஜி. ராமசந்திரனின் 37வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. சினிமாவில் ஹீரோவாக பல பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை படைத்த எம்ஜிஆர் அரசியலில் களமிறங்கி பல முறை தமிழக முதலமைச்சராகவும் ஆட்சி செய்து இன்னமும் எம்ஜிஆர் போல அரசியல் செய்யப் போகிறேன் என பலர் பேசும் அளவுக்கு நீங்காத இடத்தை மக்கள் மனதில் பிடித்துள்ளார்.

"வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதினில் நிற்பவர் யார்" என்கிற அவரது பாடல் வரிகள் எல்லாமே அவருக்கே சொந்தமான வரிகளாக என்றென்றும் நிலைத்து நிற்கும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.

mgr ulagam sutrum valiban

பாலிவுட் படங்கள் இந்திய பாக்ஸ் ஆபிஸை ஆட்சி செய்துக் கொண்டிருந்த நிலையில், கோலிவுட்டில் எம்ஜிஆர் நடித்த பல படங்கள் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்து வசூலில் கொடி கட்டிப் பறந்தன. அதில், எம்ஜிஆர் நடித்து மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்திய படம் என்றால் உலகம் சுற்றும் வாலிபன் படம் தான் என்கின்றனர். அதன் வசூல் குறித்த தகவல்களை இங்கே காணலாம்.

37வது நினைவு நாள்: 1917ம் ஆண்டு ஜனவரி 17ம் தேதி இலங்கையில் பிறந்த எம்ஜிஆர் குடும்ப கஷ்டம் காரணமாக சென்னைக்கு வந்தார். நாடகங்களில் நடித்து வந்த அவர் சினிமாவில் சிப்பாய் உள்ளிட்ட சிறு சிறு வேடங்களில் நடித்து படிப்படியாக புரட்சித் தலைவராக மாறினார். தமிழ்நாட்டின் அரசியல் சிம்மாசனத்தில் அமரந்து மக்களுக்கு நல்லாட்சி புரிந்த எம்ஜிஆர் 1987ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி இயற்கை எய்தினார். அவருடைய 37வது நினைவு நாளை ரசிகர்களும் கழகத் தொண்டர்களும் அனுசரித்து வருகின்றனர்.

உலகம் சுற்றும் வாலிபன் வசூல் சாதனை: 1973ம் ஆண்டு மே 11ம் தேதி பல தடைகளை கடந்து எம்ஜிஆர் இயக்கி டபுள் ஆக்‌ஷனில் நடித்த உலகம் சுற்றும் வாலிபன் படம் வெளியானது. அந்த படம் தான் எம்ஜிஆர் நடித்த படங்களிலேயே அதிக வசூல் ஈட்டிய படமாக மாறியது. 200 நாட்களுக்கு மேல் ஓடிய உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தின் மொத்த வசூல் உலகளவில் 4.2 கோடி ரூபாய் வரை வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதிக வசூல் செய்த படங்கள்: எம்ஜிஆர் நடிப்பில் வெளியான படங்களில் எங்கள் வீட்டுப் பிள்ளை, அடிமைப் பெண், மாட்டுக்கார வேலன், ரிக்‌ஷாக்காரன், உலகம் சுற்றும் வாலிபன், இதயக்கனி, மீனவ நண்பன், இன்று போல் என்றும் வாழ்க உள்ளிட்ட படங்கள் அதிக வசூல் செய்த படங்களாக மாறியது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X