twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Exclusive: ரூ.100 கோடி பட்ஜெட்... 2.0 போல் பிரமாண்டமாக உருவாகும் 'எம்.ஜி.ஆர்.' படம்!

    புதிய தொழில்நுட்பத்தின் மூலம் நடிகர் எம்.ஜி.ஆரை மீண்டும் வெள்ளித்திரையில் கொண்டுவரும் முயற்சியில் மலேசிய பட நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

    |

    சென்னை: மறைந்த முன்னாள் முதல்வரும், தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஆளுமையுமான நடிகர் எம்.ஜி.ஆரை புதிய தொழில்நுட்பத்தின் மூலம் புதிதாக உருவாகும் படமொன்றில் நடிக்க வைக்க இருக்கின்றனர்.

    மலேசியாவின் சர்வதேச ஊடக தொழிற்நுட்ப நிறுவனம் ஆரஞ்ச் கவுண்டி, 'என் ஃபேஸ் 'என்ற புதிய தொழில்நுட்பத்தைக் கொண்டு, கடந்த கால கதாபாத்திரங்களை நிழற்பட யதார்த்தத்தின் மூலம் உயிரோட்டமாக திரையில் உருவாக்கும் ஒரு மென்பொருளை வடிவமைத்துள்ளது.

    இந்த மென்பொருளின் உதவியோடு ஆரஞ்ச் கவுண்டி நிறுவனம், முன்னணி ஹாலிவூட் விஎப்எக்ஸ் தொழிற்நுட்ப வல்லுனர்களும் இணைந்து, புதிய தமிழ்ப்படம் ஒன்றை உருவாக்குகிறார்கள். இப்படத்தின் மிகப்பெரிய சிறப்பே, மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும், மக்கள் திலகம் என அழைக்கப்படும் நடிகர் எம்.ஜி.ஆர் அவர்களை மீண்டும் தொழில்நுட்ப உதவியோடு உயிரோட்டமாக காட்சிப்படுத்த இருப்பது தான்.

    இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தினை தமிழில் வெற்றிப் படங்கள் பல கொடுத்த முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பி.வாசு இயக்குகிறார். எம். வெங்கடேசன் ஸ்கிரிப்ட் ஆலோசகராக பங்காற்றுகிறார். இப்படத்தின் கதைக்களம் மலேசியாவில் நடைபெறுகிறது.

    இந்நிலையில் இப்படம் குறித்து ஆரஞ்ச் கவுண்டி நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி விமலநாதன் ஒன் இந்தியாவிற்கு அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியதாவது:

    3டியில் எம்.ஜி.ஆர்.

    3டியில் எம்.ஜி.ஆர்.

    இத்திரைப்படம் முழுவதுமே முப்பரிமாண ஸ்டீரியோஸ்கோபிக் முறையில் தயாரிக்கப்படுகிறது. ஒவ்வொரு காட்சியுமே முப்பரிமாண முறையில் காட்சிப்படுத்தப்பட இருப்பதாலும், இது மக்களுக்கு ஒரு பெரிய விருந்தாக அமையும். இத்திரைப்படம் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், சீனா, தாய்லாந்து, மற்றும் அமெரிக்கா என பல்வேறு நாடுகளில் படமாக்கப்பட இருக்கிறது.

    பல்வேறு சவால்கள்

    பல்வேறு சவால்கள்

    இத்தகைய மேம்பட்ட கலைப்படைப்புகளை உருவாக்குவது என்பது பல்வேறு சவால்களுக்கு பிறகே கைகூடியது எனலாம். இரண்டு வருடங்களுக்கும் மேலாக முன் உற்பத்தி வேலைகளில் தன் முனைப்புடன் இந்நிறுவனம் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, இப்புகழ்பெற்ற நடிகரின் ஒவ்வொரு அசைவையும், முக பாவத்தையும், நடத்தையையும் மிகவும் கவனமாகவும் நுணுக்கமாகவும் செயற்கை அறிவாற்றல் தொழிற்நுட்பங்கள் மூலம் பதிவு செய்துள்ளது.

    2.0வுக்கு இணையாக

    2.0வுக்கு இணையாக

    இதற்கு முன்னர் தமிழில் இத்தகைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நீண்டநேரத் திரைப்படங்கள் வெளிவரவில்லை என்றே கூறலாம். மக்களுக்கு புரிவது போல் கூற வேண்டும் என்றால் அனிமேசன் முறையில் எம்.ஜி.ஆர். சம்பந்தப்பட்ட காட்சிகளை உருவாக்காமல், 2.0, பாகுபலி படங்கள் போல் கிராபிக்ஸ் உதவியோடு எம்.ஜி.ஆரின் புகைப்படத்திற்கு உயிரூட்டி இந்தப் படத்தை உருவாக்குகிறோம். இதனால் நிஜமாகவே எம்.ஜி.ஆர். மீண்டும் உயிருடன் வந்து நடித்தது போன்று உணர்வை இப்படம் ஏற்படுத்தும்.

    மீண்டும் எம்.ஜி.ஆர்.

    மீண்டும் எம்.ஜி.ஆர்.

    எம்.ஜி.ஆர் மறைந்து இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு, அந்த வெற்றிடத்தை நிரப்பும் வகையில் மீண்டும் வெள்ளித்திரையில் அவர் உயிர்பெறும் காட்சிகள், மக்கள் மனதில் ஒரு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தும். இன்றைய இளைய தலைமுறையிறனரும் எம்ஜிஆரை ரசிக்கும் வகையில் இப்படம் தயாரிக்கப்படுகிறது.

    சூப்பர் ஹீரோ எம்.ஜி.ஆர்.

    சூப்பர் ஹீரோ எம்.ஜி.ஆர்.

    எம்.ஜி.ஆர் இதில் சூப்பர் ஹீரோவாக நடிக்கிறார். ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக எம்.ஜி.ஆர். இதில் தோன்றுவார். அவருடன் தற்போதைய இளம் தலைமுறை நடிகர்கள் பலரும் இந்த படத்தில் நடிக்க இருக்கின்றனர். பி.வாசு இந்த படத்தை இயக்குகிறார்.

    நூறு கோடி பட்ஜெட்

    நூறு கோடி பட்ஜெட்

    சுமார் நூறு கோடி ரூபாய் மதிப்பில் இப்படம் தயாராகிறது. இந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு துவங்க உள்ளது. படத்தின் தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும்.

    எம்.ஜி.ஆரின் டிஜிட்டல் உருவங்கள்

    எம்.ஜி.ஆரின் டிஜிட்டல் உருவங்கள்

    வணிக நோக்கிலும் ஒரு புதிய மற்றும் ஆக்கப்பூர்வமான மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியாகவே இப்படம் அமைகிறது. எம். ஜி. ஆர் குறித்து உருவாக்கியுள்ள டிஜிட்டல் உருவகங்களைக் கொண்டே, வருங்காலத்தில் திரைப்படங்களோ அல்லது விளம்பர படங்களோ உருவாக்க முடியும் என்பதால், இந்த முயற்சி முன்னுரிமை பெறுகிறது" என இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    தேர்தல் பிரச்சாரங்கள்

    தேர்தல் பிரச்சாரங்கள்

    மேலும் நேர்முக கதாபாத்திரங்களை திரைப்படங்கள், கண்காட்சிகள், மற்றும் தேர்தல் பிரச்சாரங்களுக்காக வடிவமைக்கும் நோக்கில் பல்வேறு நிறுவனங்களுடன் இந்த கூட்டமைப்பு தீவிரமான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    AnMalaysian company is trying to recreate former chief minister and actor M.G.R. in the silver screen again using latest technology.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X