உலக எம்.ஜி.ஆர். பேரவை மாநாடு.. வரும் 15ம் தேதி சென்னையில் பிரம்மாண்ட விழா

உலக எம்.ஜி.ஆர் பேரவை மாநாடு சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.

சென்னை : உலக எம்.ஜி.ஆர் பேரவை பிரதிநிதிகள் இணைந்து வரும் 15ம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை சென்னையில் பிரம்மாண்டமான முறையில் கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில், உலக எம்.ஜி.ஆர் பேரவை பிரதிநிதிகளும், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவைப் பிரம்மாண்டமாகக் கொண்டாட முடிவு செய்துள்ளார். சைதை துரைசாமி, ஏசி சண்முகம், விஐடி விஸ்வநாதன், மரியஸீனா ஜேப்பியார், நாஞ்சில் விண்செண்ட், குறிஞ்சி வேந்தன், முனிரத்னம், முருகு பத்மனாபன், நடிகை லதா உட்பட 11 பேர் கொண்ட குழு அதற்கான இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

MGR centenary function to be held in Chennai

இந்த விழா சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் வரும் 15ம் தேதி நடைபெறுகிறது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகராட்சி முன்னாள் மேயரும், உலக எம்.ஜி.ஆர் பேரவை பிரதிநிதியுமான சைதை துரைசாமி, 'அரசியல் சாராமல் இந்த விழா நடத்தப்படுவதாக' கூறினார்.

இது குறித்து மேலும் அவர் பேசியதாவது, "வரலாற்றில் ஒரு சிலர் தான் சரித்திரத்தில் இடம் பிடிக்கிறார்கள். சிலர் சரித்திரத்தை எழுதுகிறார்கள். ஆனால் சரித்திரத்தை புரட்டி போட்டவர் எம்ஜிஆர் தான். சினிமாவில் ஓய்வு பெறும் வரை நாயகனாகவே நடித்து வெற்றி வாகை சூடியவர். தான் மறைந்தபோது கூட முதல்வராகவே இருந்து மறைந்தவர். இந்த சிறப்பு உலகில் எவருக்குமே கிடையாது.

அவருடைய சினிமாக்களை எடுத்துக் கொண்டால் எல்லாமே ஆய்வுக்குரியது. படித்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை பாமர மக்களுக்கும் புரியும் வகையில் தன் படங்களில் எடுத்து காட்டியவர். அதனால் தான் அவரை வாத்தியார் என்று அன்போடு மக்கள் அழைக்கிறார்கள். திமுக கொடியை கூட எம்ஜிஆர் கொடி என்றே அழைத்தனர். அறிஞர் அண்ணாவை கூட எம்ஜிஆர் கட்சியா நீங்கள் என்று கேட்கும் அளவுக்கு இருந்தது அவரின் புகழ்.

சினிமா வாயிலாக, அரசியல் வாயிலாக அவர் ஆற்றிய அரும்பணிகள் ஏராளம். அவரின் மீது அன்பு வைத்துள்ள லட்சோப லட்சம் மக்கள் உள்ளனர். அவர்களை ஒருங்கிணைத்து எம்ஜிஆர் அவர்களின் புகழை பரப்ப, எந்த அரசியல் கலப்பும் இல்லாமல் ஒரு அமைப்பை உருவாக்க முடிவு செய்தோம். புரட்சித்தலைவர் மறைந்து 30 ஆண்டுகள் கழித்து, இன்றளவும் எம்ஜிஆர் பிறந்தநாள், நினைவு நாளில் மக்கள் பயன்பெறும் வகையில் எம்ஜிஆர் பக்தர்கள் செயல்பட்டு வருகிறார்கள்' என அவர் தெரிவித்தார்.

இந்த விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்து கொள்ள இருக்கிறார். மலேசிய துணை பிரதமர், மொரிஷியஸ் துணை தலைவர், இலங்கை கல்வி அமைச்சர் ஆகியோரும் தமிழகம் முழுக்க இருக்கும் எம்ஜிஆர் மன்ற உறுப்பினர்களும், திரைத்துறையினரும் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள் என விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஆடல் பாடல் கலை நிகழ்ச்சி, ஜாக்குவார் தங்கம் கலை நிகழ்ச்சி, எம்.ஜி.ஆர் பற்றிய பட்டிமன்றம், பல்சுவை நிகழ்ச்சிகள், கவியரங்கம், மணவை மாணிக்கம் எழுதிய புத்தகம் வெளியீடு, கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீடு என பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X