பிரியாணியுடன் மோதும் மதகஜராஜா
சென்னை: கார்த்தியின் பிரியாணி படம் ரிலீஸாகும் அதே நாளில் விஷாலின் மதகஜராஜாவும் ரிலீஸாகிறதாம்.
சுந்தர் சி. விஷால், வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி, சந்தானத்தை வைத்து மதகஜராஜா படத்தை இயக்கினார். இப்படத்தை ஜெமினி நிறுவனம் தயாரித்தது. ஆனால் கடல் படத்தை வெளியிட்டு நஷ்டம் கண்ட ஜெமினி நிறுவனத்தால் மதஜகராஜாவை வெளியிட முடியவில்லை.
இதையடுத்து படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.

தீயா வேலை செய்யணும் குமாரு
மதகஜராஜா ரிலீஸ் தள்ளிப்போனதும் சுந்தர் சி. தீயா வேலை செய்யணும் குமாரு படத்தை இயக்கி வெளியிட்டு வெற்றியும் கண்டுவிட்டடார்.

செப்டம்பர் 6ல் ரிலீஸ்
மதகஜராஜா எப்பொழுது வரும் என்று தெரியாமல் இருந்தது. இந்நிலையில் அந்த படத்திற்கு ஆடைகள் வடிவமைத்த வாசுகி பாஸ்கர், மதகஜராஜா வரும் செப்டம்பர் மாதம் 6ம் தேதி ரிலீஸ் ஆகிறது என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

பிரியாணியும் அன்றைக்கு தான்
வெங்கட் பிரபு இயக்கத்தில் கார்த்தி, ஹன்சிகா நடித்துள்ள பிரியாணி படம் செப்டம்பர் 6ம் தேதி தான் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் சந்தானம் தானா?
தீயா வேலை செய்யணும் குமாரு படத்தை சந்தானம் தான் தனது காமெடியால் தாங்கிப் பிடித்தார். அப்படி என்றால் மதகஜராஜாவும் அப்படித் தானா?


Click it and Unblock the Notifications











