என்னமோ எதோ படத்தில் எம்.ஜி.ஆர்... 'ஸ்பெஷல் விசிட்'!
சென்னை: டெக்னாலஜி உதவியுடன் என்னமோ ஏதோ படத்தில் மறைந்த முதல்வர் சிறப்புத் தோற்றத்தில் வருவது போன்று காட்சிகள் அமைக்கப் பட்டுள்ளதாம்.
சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளிவர இருக்கும் கோச்சடையான் படத்தில் மறைந்த நகைச்சுவை நடிகர் நாகேஷ் முக்கியக் கதாபாத்திரத்தில் வருவது போன்ற காட்சிகள் தொகுக்கப் பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் கௌதம் கார்த்திக் நாயகனாக நடிக்கும் 'என்னமோ ஏதோ' படத்தில் மறைந்த முன்னாள் முதல்வரும், புரட்சித் தலைவருமான எம்.ஜி.ஆர் நடித்துள்ளது போன்ற காட்சிகள் உருவாக்கப் பட்டுள்ளதாக அப்பட இயக்குநர் ரவி தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

ரசிகர் மன்றம்...
எம்.ஜி.ஆர்-க்கு பிடித்தது குத்துசண்டை போட்டி. இதற்கு வடசென்னையில் மிகப் பெரிய ரசிகர் மன்றமே இருந்துள்ளது.

குத்துச்சண்டை காட்சி....
ஏற்கனவே எம்.ஜி.ஆர் பல குத்துசண்டை போட்டிகளில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ளார். அதனடிப்படையில் இந்த படத்திலும் குத்துசண்டை காட்சி இடம் பெற்றுள்ளது.

காட்சி...
இப்படத்தில் 1980 ஆம் ஆண்டு பிரபுவும் முன்னாள் வில்லன் அசோகன் மகன் வின்சென்ட் அசோகன் குத்து சண்டை போட்டியில் சண்டை போடுவது போல காட்சி எடுக்கபட்டுள்ளது.

சிறப்பு விருந்தினர்...
இதில் சிறப்பு விருந்தினராக் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் கலந்து கொள்வதுபோல் படமாக்கப்ப்ட்டு உள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.

எம்.ஜி.ஆர் ரசிகர்....
பிரபு திரை உலகில் நுழைந்தபோது எம்.ஜி.ஆர் முழுநேர அரசியலுக்கு சென்றார்.பல படங்களில் எம்.ஜி.ஆர் ரசிகராகவே பிரபு நடித்துள்ளார்.இந்த படத்திலும் பிரபு எம்.ஜி.ஆர் ரசிகராகவே நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











