விடாது துரத்தும் தடவல் விவகாரம்: கஸ்தூரிக்கு நடிகர் சங்கம் கடிதம்
Recommended Video

சென்னை: எம்.ஜி.ஆர்., லதாவை பற்றி மோசமாக ட்வீட் செய்ததை கண்டித்து நடிகை கஸ்தூரிக்கு நடிகர் சங்கம் கடிதம் அனுப்பி வைத்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐ.பி.எல். போட்டி பற்றி விமர்சித்த நடிகை கஸ்தூரி, என்னய்யா இது. பல்லாண்டு வாழ்க படத்துல வாத்தியாரு லதாவை தடவினதை விட அதிகமா தடவுறாங்க என்று ட்வீட் செய்தார்.
இதை பார்த்த நடிகை லதா கோபம் அடைந்து அவருக்கு கண்டனம் தெரிவித்தார்.

கஸ்தூரி
எம்.ஜி.ஆர்., லதா பற்றிய ட்வீட் குறித்து நடிகர் சங்கம் கஸ்தூரிக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளது. அந்த கடிதத்தில், மூத்த கலைஞர்களை கொச்சைப்படுத்துவதும் அவமதிப்பதும் தவறு. நீங்கள் கூறிய கருத்துக்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும். எதிர்காலத்தில் மூத்த கலைஞர்கள் வருத்தப்படும்படி எந்த செயலையும் செய்ய வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர்
எம்.ஜி.ஆர். லதாவை தடவியதிலும் தவறு இல்லை, அதை நான் மேற்கோள் காட்டியதிலும் தவறு இல்லை. இருப்பினும் இது யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் மனமார வருந்துகிறேன் என்று கஸ்தூரி ஏற்கனவே ட்வீட் செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மன்னிப்பு
கஸ்தூரி ஏற்கனவே வருத்தம் தெரிவித்ததுடன், லதாவுக்கு போன் செய்து மன்னிப்பும் கேட்டுள்ளார். இந்நிலையில் நடிகர் சங்கம் இப்படி ஒரு கடிதத்தை அனுப்பி வைத்துள்ளது.

பரபரப்பு
சென்னை சூப்பர் கிங்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸுடன் மோதி வெற்றியும் பெற்றுவிட்டது. ஆனால் இன்னும் சமூக வலைதளங்களில் கஸ்தூரி போட்ட தடவல் ட்வீட் பற்றி தான் பேச்சாக உள்ளது. நேற்றைய போட்டி குறித்து ட்வீட் செய்த கஸ்தூரி யார், யாரையும் தடவியதை மேற்கோள் காட்டவில்லை.


Click it and Unblock the Notifications











