‘எம்ஜிஆர் மகன்’ ரிலீஸ் தேதியை இறைவன் இன்னும் ஒதுக்கவில்லை… இயக்குனர் பொன்ராம் கவலை !

சென்னை : எம்ஜிஆர் மகன் படத்துக்கு ரிலீஸ் தேதியை இறைவன் இன்னும் ஒதுக்கவில்லை என இயக்குனர் பொன்ராம் தனது ட்விட்டர் பக்கத்தில் கவலையுடன் பதிவிட்டுள்ளார்.

இப்படம் படம் ஏப்ரல் 23ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

கொனோரா பரவல் காரணமாக படம் வெளியாவது தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முன்னணி நடிகர்கள்

முன்னணி நடிகர்கள்

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா ஆகிய வெற்றி படங்களை இயக்கிய பொன்ராம், இப்படத்தை இயக்கி உள்ளார். இதில் நடிகர் சசிகுமார் ஹீரோவாக நடிக்க, டப்ஸ்மேஷ் பிரபலம் மிருணாளினி கதாநாயகியாக நடித்து உள்ளார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன்,சமுத்திரக்கனி, சிங்கம்புலி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வரவேற்பை பெற்றன

வரவேற்பை பெற்றன

இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. இப்படத்திற்கு அந்தோணிதாசன் இசை அமைத்துள்ளார். ஸ்கிரீன் சீன் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளது. வினோத் ரத்னசாமி ஒளிப்பதிவில் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு பணிகளையும், துரைராஜ் கலை இயக்குனராகவும் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

ரிலீஸ் ஒத்திவைப்பு

ரிலீஸ் ஒத்திவைப்பு

எம்ஜிஆர் மகன் திரைப்படம் ஏப்ரல் 23ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருவதை அடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு ஒத்திவைத்துள்ளது.

இறைவன் ஒதுக்கவில்லை

இறைவன் ஒதுக்கவில்லை

இந்நிலையில், இயக்குனர் பொன்ராம் தனது ட்விட்டர் பக்கத்தில், நேற்றுடன் மிக்ஸிங் முடிந்தது, எம்ஜிஆர் மகன் படத்துக்கு ரிலீஸ் தேதியை இறைவன் இன்னும் ஒதுக்கவில்லை காத்திருக்கிறோம் என கவலையுடன் பதிவிட்டுள்ளார்.

Recommended Video

என்னோட பாட்டி ஆசையை நிறைவேற்றிட்டேன் | Mirnalini Ravi Speech| Filmibeat Tamil
பல படங்கள்

பல படங்கள்

நடிகர் சசிகுமார், நடிப்பில் 'கொம்பு வச்ச சிங்கம்டா, ராஜவம்சம், நாநா, பரமகுரு, முந்தானை முடிச்சு, பகைவனுக்கு அருள்வாய்' மற்றும் வெற்றிமாறன் தயாரிக்கும் படம் என பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X