சசிகுமாரின் பொங்கல் பரிசு.. எம்.ஜி.ஆர் மகனின் ’கெளப்பு கெளப்பு’ லிரிக் வீடியோ ரிலீஸ்!
சென்னை: பொங்கலுக்கு சசிகுமாரின் எம்.ஜி.ஆர் மகன் படம் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஃபர்ஸ்ட் சிங்கிளான 'கெளப்பு கெளப்பு' பாடல் பொங்கல் பரிசாக ரிலீசாகி வைரலாகி வருகிறது.
பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார், சத்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள எம்.ஜி.ஆர் மகன் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
அந்த படத்தில் இடம்பெற்றுள்ள 'கெளப்பு கெளப்பு' பாடல் வெளியாகி பட்டித் தொட்டிகளில் எல்லாம் பட்டையை கிளப்பி வருகிறது.
சொடக்கு மேல
தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சொடக்கு மேல சொடக்கு போடுது என் விரலு வந்து என பாடி தமிழ்நாட்டு ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த பிரபல கிராமத்து பாடகர் அந்தோனி தாசன் முதல்முறை எம்.ஜி.ஆர் மகன் படம் மூலம் இசையமைப்பாளர் ஆகியுள்ளார். அவர் இசையில் அவர் குரலில் வெளியாகியுள்ள கெளப்பு கெளப்பு பாடல் பட்டையை கிளப்புகிறது.

முதல்முறை சசிகுமார்
இந்த பாடலில் முதல்முறை சசிகுமார் சில வரிகளை பாடியுள்ளார். லிரிக் வீடியோவில் அவர் பாடும் காட்சிகளும் இடம்பெற்று அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

காமெடி படம்
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்கு பிறகு பொன்ராம் இயக்கத்தில் சத்யராஜ் இணைந்துள்ளார். அதனால், எம்.ஜி.ஆர் மகன் படத்தில் நிச்சயம் காமெடிக்கு பஞ்சம் இருக்காது.

நட்சத்திர பட்டாளம்
பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள எம்.ஜி.ஆர். மகன் படத்தில் சசிகுமார், சத்யராஜ், மிருணாளினி ரவி, சமுத்திரகனி, சரண்யா பொன்வண்ணன், நந்திதா ஸ்வேதா, சிங்கம்புலி, பழ. கருப்பையா, மொட்டை ராஜேந்திரன் மற்றும் ராமசந்திரன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளனர்.

ரசிகர்கள் ஏமாற்றம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சசிகுமாரின் எம்.ஜி.ஆர் மகன், கொம்பு வச்ச சிங்கம்டா, ராஜவம்சம் என மூன்று படங்கள் திரைக்கு வரும் என முன்னதாக அறிவிக்கப்பட்டு போஸ்டர்கள் எல்லாம் வெளியாகின. ஆனால், கடைசியில் பொங்கலுக்கு ஒரு படம் கூட ரிலீசாகாததால் சசிகுமார் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

கம்பேக் ஆவாரா?
சீமராஜா படம் பொன்ராமுக்கு முதன்முறையாக மிகப்பெரிய சறுக்கலை கொடுத்தது. வெறும் காமெடியை மட்டுமே நம்பி அவர் எடுத்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினி முருகன் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த நிலையில், எம்ஜிஆர் மகன் படத்தின் மூலம் மீண்டும் வெற்றி பாதைக்கு பொன்ராம் திரும்புவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











