லாக்டவுன் வரும்னு தெரிஞ்சி சின்ன வயசிலேயே ட்ரெய்னிங் எடுத்துட்டேன்.. நடிகை மிர்ணாளினி!

சென்னை : டிக் டாக், டப்ஸ் மேஸ் மூலம் பிரபலமாகி இப்போது தமிழ் சினிமாவில் இளம் நாயகியாக கலக்கிக் கொண்டிருப்பவர் நடிகை மிர்ணாளினி ரவி.

சூப்பர் டீலக்ஸ், சம்பியன் ஆகிய படங்களை தொடர்ந்து எம்ஜிஆர் மகன், எனிமி,கோப்ரா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

தீவிரமான கொரோனா இரண்டாவது அலை காரணமாக அனைவரும் வீட்டில் இருக்கும் நிலையில் லாக்டவுன் வரும்னு தெரிஞ்சி சின்ன வயசிலேயே ட்ரெய்னிங் எடுத்துட்டேன் என சிறுவயது புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

திருநங்கையாக

திருநங்கையாக

நடிகர் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்த சூப்பர் டீலக்ஸ் பல்வேறு விருதுகளை வாங்கி குவித்தது. தியாகராஜன் குமாரராஜா இயக்கியிருந்த இந்த திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் நடிகை மிர்ணாளினி. டப்ஸ்மாஷ், டிக் டாக் உள்ளிட்ட செயலிகளின் மூலம் சமூக வலைதளங்களில் பிரபலமான இவர் இப்பொழுது ஹீரோயினாக பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

சிவகார்த்திகேயனுடன் தொடர்ந்து

சிவகார்த்திகேயனுடன் தொடர்ந்து

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா என சிவகார்த்திகேயனுடன் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருந்த இயக்குனர் பொன் ராம் இப்பொழுது முதல் முறையாக சசிகுமாருடன் இணைந்து எம்ஜிஆர் மகன் என்ற படத்தை இயக்கி உள்ளார். இதில் மிர்ணாளினி ஹீரோயினாக நடித்துள்ளார்.

கவனிக்கக் கூடிய

கவனிக்கக் கூடிய

எம்ஜிஆர் மகன் தொடர்ந்து ஆர்யா, விஷால் நடித்து வரும் எனிமி மற்றும் விக்ரமின் கோப்ரா உள்ளிட்ட படங்களிலும் மிர்ணாளினி நடித்து வருகிறார். இது தவிர தெலுங்கிலும் நாயகியாக அறிமுகமான இவருக்கு அங்கும் பெரும் வரவேற்பு கிடைக்க தென்னிந்தியாவில் கவனிக்கக் கூடிய மிகச் சிறந்த நடிகைகளில் ஒருவராக மிக விரைவில் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கையில் துடைப்பத்துடன்

கையில் துடைப்பத்துடன்

கொரோனா முதல் அலை சற்று குறைந்து படப்பிடிப்புகள் உள்ளிட்ட அனைத்து பணிகளும் தொடங்கப்பட்டு மக்கள் ஒரு வழியாக நிம்மதி பெருமூச்சு விடும் சமயத்தில் இரண்டாவது அலை தீவிரமாக பரவி மக்கள் அனைவரும் வீட்டில் அடைந்து கிடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதில் பலரும் வீட்டில் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்க நடிகை மிர்ணாளினி தனது சிறுவயது க்யூட் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இதில் குட்டிப் பாப்பாவாக இருக்கும் மிர்ணாளினி கையில் துடைப்பத்துடன் நிற்க இப்டி லாக்டவுன் வரும்னு தெரிஞ்சி சின்ன வயசிலேயே ட்ரெய்னிங் எடுத்துட்டேன். நீங்க எல்லாம் என்ன பண்றீங்க என ரசிகர்களை கேட்க அனைவரும் ஆர்வத்துடன் பதில் அளித்து வருகின்றனர்.

More from Filmibeat

Read more about: mirnalini
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X