தீபாவளிக்கு ரிலீஸாகும் எம்ஜிஆர் மகன்... ஆனால் தியேட்டரில் இல்லையாம்!

சென்னை : வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் ,சீம ராஜா என தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தவர் இயக்குனர் பொன்ராம்.

இப்பொழுது சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள எம்ஜிஆர் மகன் என்ற படத்தை இயக்கி உள்ளார்.

வரும் தீபாவளிக்கு ரிலீசாக உள்ள இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடியில் வெளியாவதாக புதிய அப்டேட் கிடைத்துள்ளது.

வருத்தப்படாத வாலிபர் சங்கம்

வருத்தப்படாத வாலிபர் சங்கம்

சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற சூப்பர் ஹிட் வெற்றி படத்தை இயக்கிய இயக்குனர் பொன்ராம் அடுத்தடுத்து படங்களிலும் தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து பணியாற்றினார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் வெற்றியை தொடர்ந்து ரஜினி முருகன் மற்றும் சீமராஜா என ஹாட்ரிக் வெற்றிகளைக் கொடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக முன்னேறினார்.

செம ரகளையாக

செம ரகளையாக

இப்பொழுது சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள எம்ஜிஆர் மகன் என்ற படத்தை இயக்கியுள்ளார். சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரகனி, நந்திதா உள்ளிட்ட பலர் இதில் முக்கிய வேடங்களில் நடித்திருக்க நடிகை மிருணாளினி இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். கிராமத்து கதை களத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் போலவே செம ரகளையாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் ரிலீசாக இருந்ததாக கூறப்பட்டது.

Recommended Video

யாருடனும் போட்டி இல்லை... தீபாவளி ரேசிலிருந்து பின்வாங்கியது சிம்புவின் மாநாடு!
தீபாவளி ரேஸில் எம்ஜிஆர் மகன்

தீபாவளி ரேஸில் எம்ஜிஆர் மகன்

ஆனால் கொரோனா பரவால் காரணமாக திரையரங்குகள் முற்றிலும் மூடப்பட்டதால் இப்படத்தின் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது. டீசர், டிரைலர், பாடல்கள் என அனைத்தும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள சூழல் இப்போது தீபாவளி ரேஸில் எம்ஜிஆர் மகன் கலந்து கொள்ள உள்ளதாக தெரியவந்துள்ளது.

டிஸ்னிப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில்

டிஸ்னிப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில்

இயக்குனர் பொன்ராமின் முந்தைய படங்களைப் போலவே இந்த திரைப்படமும் காதல் காமெடி செண்டிமென்ட் ஆக்ஷன் என அனைத்தும் கலந்த கமர்ஷியல் படமாக உருவாகி இருக்க திரையரங்குகளில் ரசிகர்களுக்கு விருந்தாக வெளியாகும் என காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் எம்ஜிஆர் மகன் நேரடியாக ஓடிடியில் வெளியாவதாக தெரியவந்துள்ளது . அதன்படி டிஸ்னிப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் எம்ஜிஆர் மகன் திரைப்படம் தீபாவளி அன்று வெளியாக உள்ளதாம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X