ஒரு சின்ன வீடியோவ பார்த்து… அதுக்கு நான் சரியா வருவேன்னு நம்புனாரு… மிருணாளினி நெகிழ்ச்சி !

சென்னை : பொன் ராம் இயக்கத்தில் உருவாகிஉள்ள எம்.ஜி.ஆர் மகன் திரைப்பம் வரும் 23ந் தேதி வெளியாக உள்ளது. இதன் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று நடைபெற்றது.

இதில், இயக்குனர் பொன்ராம், சசிக்குமார், மிருணாளினி , சத்யராஜ், சரண்யா, சிங்கம்புலி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினார்.

இதில் பேசிய மிருணாளினி, ஒரு சின்ன வீடியோ பார்த்துட்டு, என் மேல நம்பிக்கை வைத்து இந்த கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்த இயக்குனர் பொன்ராம் அவர்களுக்கு ரொம்ப நன்றி என்றார்.

எம்.ஜி.ஆர் மகன்

எம்.ஜி.ஆர் மகன்

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா என கிராமம் சார்ந்து கமர்ஷியல் படங்கள் கொடுத்து வெற்றி பெற்றவர் இயக்குனர் பொன்ராம். அவரது இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் தான் எம்.ஜி.ஆர் மகன்.

ரிலீஸ்

ரிலீஸ்

சசிகுமார் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக மிருணாளினி ரவி நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, சிங்கம் புலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் ஏப்ரல் 23ந் தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

Recommended Video

MGR படங்கள் மீது காதல் அதிகம் |lyricist Madhan Karky | Thalaivi Pressmeet| Filmibeat Tamil
பெருமையாக இருக்கு

பெருமையாக இருக்கு

இந்நிலையில் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது இதில் பேசிய, மிருணாளினி, எம்.ஜிஆர் மகன் திரைப்படம் எப்போ ரிலீஸ் ஆகும்னு நான் ரொம்ப நாள் காத்துக்குட்டு இருந்தேன். இந்த படத்தில் நிறைய ஜாம்பவான்கள் நடித்திருக்கிறார்கள். சத்தியராஜ், சரண்யா அவங்களோட நடித்தது மிகவும் பெருமையாக இருக்கு. அவங்க எனக்கு நிறைய விஷயங்களை கத்துக்கொடுத்தாங்க அது எனக்கு மிகவும் உதவியா இருந்தது.

இயக்குனருக்கு நன்றி

இயக்குனருக்கு நன்றி

மேலும், பேசிய அவர், டப்ஸ்மேஷ்ல ஒரு சின்ன வீடியோ பார்த்துட்டு, இந்த கதாபாத்திரத்திற்கு நான் சரியா வருவேன், நல்ல நடிப்பேன்னு என்னை நம்பி இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த பொன்ராம் அவர்களுக்கு நன்றி. என்னுடைய ரொம்பநாள் ஆசை ஒரு தமிழ் படத்துல நடிச்சி தமிழ் மக்கள் மனசுல இடம் பிடிக்கனும்னு அந்த ஆசை இப்போ நிறைவேறி இருக்கு இந்த வாய்பை கொடுத்த தயாரிப்பாளர், இயக்குனர் என அனைவருக்கும் நன்றி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X