சசிச்குமாரின் ‘எம்ஜிஆர் மகன்’ இப்போதைக்கு ரிலீஸ் இல்லை!

சென்னை : இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் உருவாகி உள்ள எம்.ஜி.ஆர் மகன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு தள்ளிவைத்துள்ளது.

எம்.ஜி.ஆர் மகன் திரைப்படம் ஏப்ரல் 23ந் தேதி வெளியாகி இருந்த நிலையில் இந்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா ஆகிய வெற்றி படங்களை இயக்கிய பொன்ராம், இப்படத்தை இயக்கி உள்ளார்.

முக்கிய நடிகர்கள்

முக்கிய நடிகர்கள்

இப்படத்தில், நடிகர் சசிகுமார் ஹீரோவாக நடிக்க, டப்ஸ்மேஷ் பிரபலம் மிருணாளினி கதாநாயகியாக நடித்து உள்ளார். மேலும் சத்யராஜ் சரண்யா பொன்வண்ணன்,சமுத்திரக்கனி, சிங்கம்புலி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வரவேற்பை பெற்றன

வரவேற்பை பெற்றன

இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. இப்படத்திற்கு அந்தோணிதாசன் இசை அமைத்துள்ளார். ஸ்கிரீன் சீன் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளது. வினோத் ரத்னசாமி ஒளிப்பதிவில் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு பணிகளையும், துரைராஜ் கலை இயக்குனராகவும் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

ரிலீஸ் ஒத்திவைப்பா ?

ரிலீஸ் ஒத்திவைப்பா ?

எம்ஜிஆர் மகன் திரைப்படம் ஏப்ரல் 23 தேதி வெளியாகும் என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருவதை அடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இருப்பினும் இந்த தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

பல படங்கள் கைவசம்

பல படங்கள் கைவசம்

நடிகர் சசிகுமார், நடிப்பில் 'கொம்பு வச்ச சிங்கம்டா, ராஜவம்சம், நாநா, பரமகுரு, முந்தானை முடிச்சு, பகைவனுக்கு அருள்வாய்' மற்றும் வெற்றிமாறன் தயாரிக்கும் படம் என பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X