Just In
Don't Miss!
- Lifestyle
இன்னைக்கு இந்த மூன்று ராசிக்காரங்களுக்கு பெரிய ஆபத்து காத்திருக்கு... உங்க ராசியும் இதுல இருக்கா?
- News
என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கு.. ரஜினி நெகிழ்ச்சி
- Finance
உள் நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு..!
- Sports
யாருப்பா அது? யுவராஜ் சிங்கை அடுத்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட இளம் இந்திய கிரிக்கெட் வீரர்!
- Automobiles
மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களின் விலை அடுத்த ஆண்டு முதல் அதிகரிப்பு...
- Education
TNPSC: தேர்தலுக்காக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்!! விபரங்கள் உள்ளே..!
- Technology
2020 இலக்கு: வெளியாகும் விவோ அட்டகாச ஸ்மார்ட் போன்கள் பட்டியல்
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பொங்கலுக்கு ரஜினியுடன் மோத போகும் கௌதம் மேனன் பட நடிகர்
சென்னை : எனை நோக்கி பாயும் தோட்டா படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
உலகமெங்கும் வெளியான அனைத்து திரையரங்குகளிலும் வசூல் வேட்டை செய்துள்ளது ,இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சசிகுமார் அடுத்து பொன்ராம் இயக்கத்தில் எம்.ஜி.ஆர். மகன் படத்தில் நடித்து இருக்கிறார்.

எம்.ஜி.ஆர் மகன் படத்தை பிரபல இயக்குனர் பொன்ராம் இயக்கி வருகிறார். பொன்ராம் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா ஆகிய வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர். இவர் இதற்கு பின் இந்த எம்.ஜி.ஆர் மகன் படத்தை இயக்கி வருகிறார்.
எம்.ஜி.ஆர் மகன் படத்தில் சசிகுமார், மிர்னாலினி, சமுத்திரகனி, சத்யராஜ், ராதிகா, சிங்கம்புலி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர் .இந்த படத்தை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரித்து வருகிறது .படத்தின் தயாரிப்பு அன்மையில் தேனியில் நிறைவேறியது .
இந்த படத்தின் மூலம் முதல்முறையாக இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் பாடகர் அந்தோனி தாசன். சசிகுமார் கடைசியாக கென்னடி கிளப் படத்தில் நடித்திருந்தார் . இதற்கடுத்து நாடோடிகள் 2,கொம்பு வச்ச சிங்கம்டா, ராஜவம்சம், பரமகுரு ஆகிய படங்களில் நடித்து வருகிறார் .

எம்.ஜி.ஆர்.மகன் டைட்டில் லுக் தற்போது வெளியாகியுள்ளது ,அதன் மூலம் படம் பொங்கலுக்கு வெளியாகும் என தெரிகிறது. பொங்கலுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் வெளியாவது குறிப்பிடதக்கது.
எதார்த்தமாக எடுத்த போட்டோவை.. பதார்த்தமாக பதிவேற்றி.. ரசிகர்களுக்கு ஆச்சரியமளித்த நயன்தாரா !
தற்போது தர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது .தற்போது சும்மா கிழி பாடல் தான் டிரென்ட் ,எங்கு பார்த்தாலும் அந்த பாடல் தான் ஓடிக்கொண்டிருக்கிறது . அந்த அளவுக்கு சும்மா கிழி பாடல் மக்களிடைய வெற்றி அடைந்து உள்ளது . ஒரு பக்கம் ட்ரெண்டிங் மறுபக்கம் அந்த பாட்டை சிலர் பல பாடல்களுடன் ஒப்பிட்டு இணையதளத்தில் கிழி கிழியென்று கிழிக்கிறார்கள் .
பொங்கல் ரேசில் தற்போது தர்பார் மற்றும் எம்.ஜி.ஆர்.மகன் படம் கலம் இறங்கியுள்ளது ,இதனை அடுத்து என்ன என்ன படங்கள் மேலும் வரிசை கட்டி நிக்க போகிறது என்பதை பொருத்திருந்து பார்போம்.