50 ஆண்டுகள் கழித்து வெளியாகி, வெள்ளி விழா கண்ட எம்ஜிஆரின் ஆயிரத்தில் ஒருவன்!

By Shankar

இன்றைக்கெல்லாம் எவ்வளவு பெரிய நடிகரின் படமாகவே இருந்தாலும் அது நூறு நாட்களைத் தொடுவதே பிரம்மப் பிரயத்தனம் எனும் நிலை.

மூன்று வாரம் ஓடினாலே போதும் என்பதுதான் நிதர்சனம்.

ஆனால் காலத்தை வென்ற காவிய நாயகர்களான எம்ஜிஆரும் சிவாஜியும் மட்டும் இதில் விதிவிலக்கு.

கர்ணன்

கர்ணன்

சிவாஜி நடித்த கர்ணன் படம் ஐம்பத்தியோரு ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் மறுவெளியீடாக வந்து நூறு நாட்களுக்கு மேல் ஓடி நல்ல வசூலைக் குவித்தது. இந்தப் படத்தை பிஆர் பந்துலு இயக்கியிருந்தார்.

ஆயிரத்தில் ஒருவன்

ஆயிரத்தில் ஒருவன்

இந்த ஆண்டு அதே பிஆர் பந்துலு இயக்கிய அமரர் எம்ஜிஆரின் ஆயிரத்தில் ஒருவன் வெளியானது. 1964-ல் கர்ணனை எடுத்த பந்துலு, அதற்கு அடுத்த ஆண்டு இந்த ஆயிரத்தில் ஒருவனை இயக்கினார். எம்ஜிஆர் ஜோடியாக இப்போதைய முதல்வர் ஜெயலலிதா நடித்திருந்தார்.

மறுவெளியீடு

மறுவெளியீடு

படம் மாபெரும் வெற்றி பெற்றது. பந்துலுவின் அத்தனை கடன்களும், சிக்கல்களும் தீர்ந்தன.

தற்செயலாகவோ திட்டமிட்டோ இதே போன்ற இடைவெளியில் மறுவெளியீடாக வந்தன இரு படங்களும். 2013-ல் கர்ணனும், 2014-ல் ஆயிரத்தில் ஒருவனும் மறுவெளியீடு கண்டு மகத்தான வெற்றி பெற்றுள்ளன.

புது சாதனை

புது சாதனை

குறிப்பாக ஆயிரத்தில் ஒருவன் படம் நிகழ்த்தியிருப்பது சரித்திர சாதனை.

டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்ட ஆயிரத்தில் ஒருவன் தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் 14-ந்தேதி வெளியிடப்பட்டது. மொத்தம் 122 தியேட்டர்களில் திரையிடப்பட்டது.
தற்போது சென்னையில் உள்ள சத்யம், ஆல்பட் தியேட்டர்களில் 25-வது வாரமாக நோக்கி ஓடிக் கொண்டு இருக்கிறது, நல்ல வசூலுடன்.

பாராட்டு விழா

பாராட்டு விழா

இதையொட்டி ‘ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் பணியாற்றியவர்களை பாராட்டி சிறப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

175-வது நாள் வெற்றி விழாவையும் கலைஞர்களுக்கு பாராட்டு விழாவையும் நாளை மறுநாள் (1-ந்தேதி) மாலை 6.30 மணிக்கு தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடத்துகின்றனர். சரத்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்குகிறார்.

பி வாசு

பி வாசு

ஆயிரத்தில் ஒருவன் படத்தை வெளியிட்ட திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் வரவேற்று பேசுகிறார். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர்களான சத்யராஜ், பி.வாசு, ஆர்.பாண்டியராஜன், விக்ரமன், விவேக், செந்தில், கே.ராஜன், மயில்சாமி, சார்லி, ஜாக்குவார் தங்கம் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

கேடயம்

கேடயம்

ஆயிரத்தில் ஒருவன் படத்தில் பணியாற்றிய பல கலைஞர்கள் இப்போது இல்லை. இசையமைத்த எம்.எஸ்.விஸ்வநாதன், பின்னணி பாடலை பாடிய பி.சுசீலா, வசன கர்த்தா ஆர்.கே.சண்முகம், நாகேஷ் ஜோடியாக நடித்த மாதவி, எல்.விஜய் லட்சுமி, பத்மினி பிக்சர்ஸ் பி.ஆர்.ரவிசங்கர் போன்றோருக்கு விழாவில் கேடயம் வழங்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X