twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எம்ஜிஆரின் கனவு, கமலின் ஆசை, ரஜினி தேர்வு,விஜய்யின் முயற்சி வென்றது கார்த்தி..உள்ளம் கவர் வந்தியதேவா

    |

    சென்னை: திரைத் துறையில் அனைத்து வெற்றிகளையும் பெற்ற எம்ஜிஆரின் கனவாக இருந்தது வந்தியதேவன் பாத்திரம் தான். நினைத்த பாத்திரங்களை எல்லாம் வெற்றிகரமாக நடித்து முடித்த கமலின் ஆசையாக இருந்தது வந்தியதேவன் பாத்திரம்.

    ஜெயலலிதா, சிவாஜி போன்ற பெரிய ஆளுமைகள் இவர்தான் நடிக்க வேண்டும் என்று ரஜினியை சுட்டிக்காட்டியது வந்தியதேவன் பாத்திரத்திற்கு தான்.

    இடையில் பூஜை போடப்பட்டு விஜய் நடிப்பதாக இருந்து பாத்திரம் இவர்கள் யாருக்குமே கிடைக்காத வாய்ப்பு நடிகர் கார்த்திக்கு கிடைத்துள்ளது வாசகர் உள்ளம் கவர்ந்த அந்த வந்தியத்தேவன் பாத்திரம்.

    பீஸ்ட் பண்ண அதே தப்பு.. பொன்னியின் செல்வனுக்கு போட்டியான தனுஷின் நானே வருவேன்.. தப்பிக்குமா? பீஸ்ட் பண்ண அதே தப்பு.. பொன்னியின் செல்வனுக்கு போட்டியான தனுஷின் நானே வருவேன்.. தப்பிக்குமா?

     தமிழ் திரையுலகின் முடிசூடா மன்னர் எம்ஜிஆர்

    தமிழ் திரையுலகின் முடிசூடா மன்னர் எம்ஜிஆர்

    பொன்னியின் செல்வம் படம் இரண்டு பாகங்களாக தயாரிக்கப்பட்டு வரும் செப்டம்பர் 30ஆம் தேதி முதல் பாகம் வெளியாக உள்ளது. வழக்கமாக ரசிகர்கள் தான் தங்கள் அபிமான நடிகர்கள் ஒரு பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். ஆனால் திரை உலகின் உச்சத்தை தொட்ட நடிகர்களை ஆசைப்பட்ட பாத்திரம் வந்திய தேவன் பாத்திரம். தமிழ் திரை உலகில் நினைத்ததை முடிப்பவன் என்று பெயர் எடுத்தவர் எம்ஜிஆர். அவர் நினைத்ததை சாதித்தார். அவர் போடுவது தான் வேடம். அவர் போடுவது தான் உடை. அவர் சொல்வது தான் வசனம். அவர் பாடுவது தான் பாட்டு என்ற நிலையில் வாழ்ந்த ஒரு மிகப்பெரிய உச்ச நட்சத்திரம் எம்ஜிஆர்.

     தமிழ் திரையுலகின் நினைத்ததை முடிப்பவர் எம்ஜிஆரின் நிறைவேறா கனவு

    தமிழ் திரையுலகின் நினைத்ததை முடிப்பவர் எம்ஜிஆரின் நிறைவேறா கனவு

    அந்த எம்.ஜி.ஆருக்கும் ஒரு கனவு இருந்தது அது பொன்னியின் செல்வன் படத்தில் வந்திய தேவனாக நடிக்க வேண்டும் என்பதே. அதற்கான போட்டோ சூட் உள்ளிட்டவை நடத்தி தன்னை தயார் படுத்தி வைத்திருந்தார் எம்ஜிஆர். அவர் நினைத்தால் முடித்து விடுவார் என்பது தான் திரையுலகில் பேச்சு. ஆனால் எம்.ஜி.ஆர் முயன்றும் முடியாமல் போன ஒன்று பொன்னியின் செல்வன் காவியத்தை படம் ஆக்குவது. பொன்னியின் செல்வன் காப்பி ரைட்டிங்கை முறையாக பணம் கொடுத்து வாங்கி வைத்திருந்த எம்ஜிஆர் பல்வேறு காரணங்களால் அப்படத்தை எடுக்க முடியாமல் போனது துரதிஷ்டமே. மன்னர் வேடங்களில் மிகப் பொருத்தமானவராக, கம்பீரமானவராக வலம்வந்த எம்ஜிஆர் வந்திய தேவன் பாத்திரத்தில் நடித்திருந்தால் தமிழ் துறைகளில் அது ஒரு சிறந்த படமாக அமைந்திருக்கும்.

     எம்ஜிஆருக்கு மட்டுமல்ல உலக நாயகன் கமலுக்கும் நிறைவேறா கனவு

    எம்ஜிஆருக்கு மட்டுமல்ல உலக நாயகன் கமலுக்கும் நிறைவேறா கனவு

    எப்படி எம்.ஜி.ஆருக்கு அந்த கனவு நிறைவேறாமல் போனதோ அதேபோல் தமிழ் திரையுலகின் அடுத்த நட்சத்திரம் கமலுக்கும் அது நிறைவேறாத கனவாக அமைந்தது பொன்னியின் செல்வன். பொன்னியின் செல்வன் படத்தை தயாரிக்க ஆசைப்பட்டது, அதற்கான முயற்சிகளை எடுத்தது, அதை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதற்கான பல்வேறு முயற்சிகள் எடுத்தது கமல்ஹாசன். தமிழ் திரை உலகில் சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவிலேயே முதலீடு செய்த ஒரே மனிதர் கமல்ஹாசன். எம்ஜிஆர் போலவே நினைத்ததை முடிப்பவர் கமல்ஹாசன். தமிழ் திரை உலகில் பல புதிய முயற்சிகளை எடுத்தவர் கமல்ஹாசன். கமல்ஹாசன் தமிழ் திரை உலகில் பல்வேறு புதுமைகளை தன் காலகட்டத்தில் நடத்தி காட்டியவர். பார்வையற்றவராக நடித்தது, பாடலே இல்லாத படத்தை எடுத்தது, இந்திய பிரிவினை என்பது நடந்த விஷயங்களை அழகாக பதிவு செய்த ஹேராம் என பல விஷயங்களை சொல்லலாம்.

     33 ஆண்டுகளுக்கு முன் கமல் தயாரித்து நடிக்க ஆசைப்பட்ட வந்தியதேவன் ரோல்

    33 ஆண்டுகளுக்கு முன் கமல் தயாரித்து நடிக்க ஆசைப்பட்ட வந்தியதேவன் ரோல்

    அப்படிப்பட்ட கமல்ஹாசன் 33 ஆண்டுகளுக்கு முன் பொன்னியின் செல்வனை தயாரிக்கும் முயற்சி செய்து நம்பர் ஒன் இயக்குனர் மணிரத்தினத்துடன் பேசி அனைத்து ஏற்பாடுகளும் செய்த நிலையில் தள்ளிப்போனது. இதில் கமல்ஹாசன் ஆசைப்பட்ட பாத்திரம் வந்தியதேவன் பாத்திரம். ஆனால் சிவாஜி கணேசனிடம் ஆலோசனை கேட்ட பொழுது வந்தியதேவனாக ரஜினிகாந்த் போடு என்று கமல்ஹாசன் ஆசைக்கு முட்டுக்கட்டை போட்டார். அதன் பின்னர் ஜெயலலிதாவிடம் எடுக்கப்பட்ட ஒரு பேட்டியில் சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜி, என்டிஆர் உள்ளிட்ட ஆளுமைகளுடன் நடித்த ஜெயலலிதா வந்தியதேவன் பாத்திரத்துக்கு சரியான நபர் என்று சொன்னது நடிகர் ரஜினிகாந்தை.

     கமல் படம் எடுத்திருந்தால் ரஜினிதான் வந்தியத்தேவன்

    கமல் படம் எடுத்திருந்தால் ரஜினிதான் வந்தியத்தேவன்

    ஒருவேளை கமல்ஹாசன் படத்தை எடுத்திருந்தால் அவர் ஆசைப்பட்ட வந்தியதேவன் பாத்திரம் அவருக்கு கிடைத்திருக்காமல் போயிருக்கலாம். ரஜினிகாந்துக்கு வந்தியதேவன் பாத்திரம் கிடைத்திருக்கும். ஆனால் இருவருக்குமே அந்த வாய்ப்பு கிடைக்காமல் போனது வந்திய தேவன் பாத்திரம். இதற்கு அடுத்து நடிகர் விஜய்யை வந்தியதேவனாகவும், மகேஷ் பாபுவை அருள்மொழிவர்மனாகவும் வைத்து பொன்னியின் செல்வன் தயாரிப்பதற்கான போட்டோஷூட் நடத்தப்பட்டது. தமிழ் சினிமாவில் ரஜினிகாந்துக்கு அடுத்து உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய் தமிழகம் தாண்டி மற்ற மாநிலங்களிலும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளவர். அவருக்கும் அந்த பாத்திரம் கிட்டவில்லை. கடைசியில் பொன்னியின் செல்வன் கமல்ஹாசன் ஆசைப்பட்டது போல் இயக்குனர் மணிரத்தினம் எடுத்துள்ளார். ஆனால் தயாரிப்பாளர் கமல்ஹாசன் அல்ல, அதில் கமலஹாசனின் பங்கு வாய்ஸ் கொடுத்தது மட்டுமே.

     70 ஆண்டுகாலம் உச்ச நட்சத்திரங்களின் கனவு பாத்திரம் வந்தியதேவன்

    70 ஆண்டுகாலம் உச்ச நட்சத்திரங்களின் கனவு பாத்திரம் வந்தியதேவன்

    எம்ஜிஆர், கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய்க்கு கிட்டாத வந்தியதேவன் பாத்திரம் கார்த்திக்கு கிடைத்தது அவர் செய்த பாக்கியம். தமிழ் வாசகர்கள் பொன்னியின் செல்வனை வாசித்தவர்கள் நெஞ்சங்களில் வந்தியதேவன் பாத்திரம் மிகப்பெரிய இடத்தை பிடித்துள்ள பாத்திரமாகும். அது தமிழ் திரையுலகையை ஆண்ட நட்சத்திரங்களான எம்ஜிஆர், தற்போதுள்ள ஆளுமைகள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்டோரையும் அவர்கள் நினைத்ததை செய்யக்கூடிய இடத்திலிருந்தும் இயற்கை அவர்களுக்கு அந்த வாய்ப்பை தரவில்லை. கார்த்திக்குக்கு தான் அந்த வாய்ப்பு கிடைத்தது. தமிழ் மக்களின் உணர்வுகளோடு ஒன்றிபோன ஒரு வந்திய தேவன் பாத்திரம் 70 ஆண்டுகளுக்கும் மேலாக பல கதாநாயகர்களின் கனவை கடந்து கார்த்திக்கு கிடைத்துள்ளது பிரமிக்கத்தக்க ஒன்று எனலாம்.

    English summary
    The role of Vandiyadevan was the dream of MGR who achieved all the successes in the film industry. Vandidevan role was the role Kamal wanted to play when he wanted to make Ponni's Selvan. Great personalities like Jayalalitha and Shivaji said that Rajinikanth was suitable for the role of Vandiyathevan. But what they thought turned out to be a dream.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X