twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜெயலலிதா வாழ்வில் நடந்த அந்த அரசியல் திருப்பச் சம்பவம்... 'தலைவி'க்காக அப்படியே உருவாக்கும் படகுழு

    By
    |

    Recommended Video

    தலைவி படத்தில் வித்யா பாலனை நடிக்க வைக்க விரும்பிய இயக்குநர் ஏ.எல். விஜய்- வீடியோ

    சென்னை: ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கைக்கு திருப்புமுனையாக அமைந்த அந்தச் சம்பவத்தை, தலைவி படத்துக்காக அப்படியே உருவாக்கி வருகின்றனர்.

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதை 'தலைவி' என்ற பெயரில் உருவாகி வருகிறது.

    இந்தி நடிகை கங்கனா ரனவத், ஜெயலலிதா கேரக்டரில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை விஜய் இயக்குகிறார்.

    சசிகலா பிரியாமணி

    சசிகலா பிரியாமணி

    நடிகர் அரவிந்த்சாமி எம்.ஜி.ஆராக நடிக்கிறார். இவரது எம்.ஜி.ஆர் லுக் போஸ்டர்கள் கடந்த மாதம் எம்.ஜி.ஆர் பிறந்த நாளன்று வெளியிடப்பட்டது. இது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றன. நடிகர் பிரகாஷ்ராஜ், கருணாநிதியாக நடிக்கிறார் என்றும் பிரியாமணி, சசிகலாவாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே நடிகை கங்கனாவுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது. இதை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.

    ஜூன் 26 ஆம் தேதி

    ஜூன் 26 ஆம் தேதி

    இந்நிலையில், இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர்களின் ஒருவரான பிருந்தா பிரசாத் அறிவித்திருந்தார். அதன்படி ஜூன் மாதம் 26 ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. அதோடு, கங்கனா நடனம் ஆடுவது போன்ற ஸ்டில் ஒன்றையும் அவர் வெளியிட்டிருந்தார். இந்த ஸ்டில் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    திருப்புமுனை

    திருப்புமுனை

    இந்நிலையில் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கைக்கு திருப்புமுனையாக அமைந்த சம்பவத்தை படக்குழுவினர் இப்போது படமாக்கி வருகின்றனர். எம்.ஜி.ஆர் மறைந்த போது அவரது உடல், ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு அரசியல் தலைவர்கள், நடிகர், நடிகைகள் மற்றும் பொதுமக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். கண்ணீர் விட்டு கதறினர்.

    வெளியேற்றினர்

    வெளியேற்றினர்

    அப்போது எம்.ஜி.ஆரின் உடல் டிரெக்கில் மெரினா பீச்சுக்கு கொண்டு செல்லப்பட்டபோது, உடலின் அருகில் இருந்த ஜெயலலிதாவை, சிலர் அங்கிருந்து வெளியேற்றினர். இந்தச் சம்பவம் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. இப்போது அந்தக் காட்சியை, தலைவி படத்துக்காக சென்னையில் படமாக்கி வருகின்றனர். சென்னை ராஜாஜி ஹாலில் செட் அமைத்து இந்தக் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது.

    English summary
    MGR's funeral recreated for Jayalalithaa's biopic Thalaivi
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X