எம்.ஜி.ஆர் பேரன் நடிக்கும் படமா.. டைட்டிலே ட்ரெண்டியா இருக்கே மனோகரா!!!
சென்னை : இந்த ஆண்டு தொடக்கத்தில் உலகயே திரும்பிப்பார்க்கவைக்கும் விதமாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தை பின்னணியாகக் கொண்டு 'வாட்ஸ் அப்' எனும் படம் தயாராகிறது. இந்தப் படத்தில், எம்.ஜி.ஆரின் பேரன் வி.ராமச்சந்திரன் கதாநாயகனாக நடிக்கிறார்.
ஷஜினா ஷஜின் மூவிஸ் மற்றும் எஸ்.பி.கே பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் தான் 'வாட்ஸ் அப்'. இயக்குனர் ரஷீத் இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். மேலும் ஜேவி இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் துணைவியார் ஜானகி அம்மாளின் தம்பி மகள் சுதா விஜயகுமாரின் மகன் தான் இந்த வி.ராமச்சந்திரன். இவருக்கு தன்னுடைய பெயரையே சூட்டியதும் கூட எம்.ஜி.ஆர் தான். இந்தப்படத்தில் ராமச்சந்திரனுக்கு ஜோடியாக பெங்களூரைச் சேர்ந்த தமிழ்ப்பெண்ணான தீப்தி நடிக்கிறார்.
வரும் நவம்பர் மாதம் 15-ம் தேதி 'வாட்ஸ் அப்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கி, உடுமலை, பொள்ளாச்சி, மூணாறு மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் நடக்க இருக்கிறது.


Click it and Unblock the Notifications











