வந்தியத்தேவனும் நானே.. அருள்மொழியும் நானே.. வெளியானது எம்ஜிஆரின் பொன்னியின் செல்வன் மோஷன் போஸ்டர்
சென்னை: கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை முதன்முதலாக படமாக எடுக்கத் துடித்தவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் தான்.
Recommended Video
ஆனால், கடைசி வரை அவரால் அந்த படத்தை உருவாக்க முடியாமல் போய் விட்டது.
இந்நிலையில், இயக்குநர் அஜய் பிரதீப் இயக்கத்தில் எம்ஜிஆர் வந்தியத்தேவனாகவும் அருள்மொழி வர்மனாகவும் இரட்டை வேடங்களில் நடிக்கும் அனிமேஷன் திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது.

பிறந்தநாளன்று அறிவிப்பு
மறைந்த மக்கள் திலகம் எம்ஜிஆரின் 105வது பிறந்தநாள் தினத்தில் பொன்னியின் செல்வன் அனிமேஷன் திரைப்படம் மற்றும் வெப் தொடர் பற்றிய அறிவிப்பு வெளியாகி ஒட்டுமொத்த எம்ஜிஆர் ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், இன்று பொன்னியின் செல்வன் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது.

டபுள் ஆக்ஷனில் எம்ஜிஆர்
கதையின் நாயகனாக அருள்மொழி வர்மன் எனும் பொன்னியின் செல்வன் இருந்தாலும், கல்கி எழுதிய கதையின் நாயகன் வந்தியத்தேவன் தான். இந்நிலையில், வந்தியத்தேவனாகவும், அருள்மொழி வர்மனாகவும் இரட்டை வேடங்களில் எம்ஜிஆர் இந்த அனிமேஷன் திரைப்படத்தில் தோன்றி ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தப் போகிறார் என இந்தப் படத்தின் இயக்குநர் அஜய் பிரதீப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மோஷன் போஸ்டர் ரிலீஸ்
வந்தியத்தேவனாகவும் அருள்மொழி வர்மனாகவும் இரு வேறு தோற்றங்களில் அனிமேஷன் உருவமாக எம்ஜிஆர் அசத்தும் அட்டகாசமான மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகி வேகமாக பரவி வருகிறது. எட்டர்னைட்டி எனும் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில் பான் இந்தியா படமாக பல்வேறு மொழிகளில் இந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகப் போகிறதாம்.

மணிரத்னம் இயக்கத்தில்
எம்ஜிஆர் கண்ட பிரம்மாண்ட கனவை இயக்குநர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் எனும் பெயரில் படமாக உருவாக்கி வருகிறார். விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என ஏகப்பட்ட பிரபல நடிகர்கள் நடிப்பில் உருவாகி வரும் அந்த படம் இந்த ஆண்டு திரைக்கு வர காத்திருக்கிறது. இந்நிலையில், பொன்னியின் செல்வன் எனும் அனிமேஷன் திரைப்படம் எம்ஜிஆர் அனிமேஷனை வைத்து உருவாக்கப்பட்டு வருவது ரசிகர்களை மேலும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











