மீண்டும் எம்ஜிஆர் - சிவாஜி படங்கள் மோதல்!

பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சென்னையில் அப்படியொரு காட்சியை இன்று பார்க்க முடிந்தது.
இன்று ஒரே நாளில் எம்ஜிஆரின் குடியிருந்த கோயில் படமும் சிவாஜியின் கர்ணன் படமும் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெளியாயின.
எம்ஜிஆர் நடிப்பில் வெளியான குடியிருந்த கோயில், அவரது நடிப்பில் புதிய பரிமாணத்தைக் காட்டிய படம். இரட்டை வேடங்களில் ஜொலிப்பார் எம்ஜிஆர். இந்தப் படத்தில் எம்ஜிஆருக்கு ஜோடி ஜெயலலிதா. இருவரின் ஜோடிப் பொருத்தமும் அசத்தலாக இருக்கும்.
அன்றைய நாட்களில் வசூலில் புதிய சாதனைப் படைத்தது குடியிருந்த கோயில்.
இந் நிலையில் இந்த இரு படங்களையும் எம்ஜிஆர், சிவாஜியின் ரசிகர்கள் ஒன்றிணைந்து மீண்டும் வெளியிட்டுள்ளனர்.
இன்று படம் வெளியான அரங்குகளில் இரு தரப்பு ரசிகர்களும் வரிசையில் நின்று படத்துக்கு டிக்கெட் வாங்கிப் பார்த்தனர்.
Comments


Click it and Unblock the Notifications