'எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல்'... வனிதா தயாரிக்கிறார்.. புதுக் கணவர் ராபர்ட் இயக்குகிறார்!

By Mayura Akilan

விஜயகுமார்- மஞ்சுளா தம்பதியரின் மகளும் மாஜி ஹீரோயினுமான வனிதா விஜயகுமார் தயாரிக்கும் படம் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல். இந்தப் படத்தில் நான்கு புதுமுக ஹீரோக்கள் அறிமுகமாகிறார்களாம்.

வனிதா விஜயகுமார் தற்போது நடன இயக்குனர் ராபர்ட்டுடன் வாழ்ந்து வருகிறார். இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது.

இந்த நிலையில் வனிதா தனியாக வனிதா பிலிம் புரொடக்ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, புதிதாக படம் தயாரிக்கிறார்.

ராபர்ட் இயக்கம்

ராபர்ட் இயக்கம்

வனிதா தயாரிக்கும் படத்திற்கு எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி கமல் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனை வனிதாவின் பார்ட்னரான நடன இயக்குனர் ராபர்ட் இயக்குகிறார்.

புதுமுகங்கள் அறிமுகம்

புதுமுகங்கள் அறிமுகம்

இதில் புதுமுகங்கள் நடிக்கிறார்கள். பிரபல நட்சத்திரங்களுக்கு ரசிகர் மன்றம் வைக்கும் இளைஞர்கள் அதற்காக என்னவெல்லாம் செய்கிறார்கள். ரசிகர் மன்றங்களின் மூலம் என்ன செய்கிறார்கள்.

அதற்குள் நடக்கும் பதவி போட்டி என ரசிகர் மன்றம் தொடர்பான விஷயங்களை காமெடியாக சொல்கிறார்களாம்.

விரைவில் ஆடியோ வெளியீடு

விரைவில் ஆடியோ வெளியீடு

இதன் படப்பிடிப்புகள் சென்னை புறநகர் பகுதிகளில் வேகமாக நடந்து வருகிறது. இதுவரை 70 சதவிகித பப்பிடிப்புகள் முடிந்து விட்டது. ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்துள்ளார். விரைவில் பாடல்களை வெளியிட இருக்கிறார்கள்.

பிரபலமானவர்கள் பெயரில்

பிரபலமானவர்கள் பெயரில்

தமிழ் திரை உலகில் பிரபலமானவர்கள் பெயரில் படம் எடுப்பது புதிய விசயமல்ல. ஏற்கனவே தனுஷ் 5ஆம் வகுப்பு, சிநேகாவின் காதலர்கள், சரவணன் என்கிற சூர்யா போன்ற பெயரில் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்போது எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் ஆகிய நான்கு பேரின் பெயரை தலைப்பாக வைத்துள்ளார் வனிதா விஜயகுமார்.

கடவுள் போன்றவர்கள்

கடவுள் போன்றவர்கள்

ஏன் இப்படி என்று கேட்டால், இவர்கள் நால்வரும் தமிழ் திரை உலகின் கடவுள் போன்றவர்கள் எனவே இவர்களின் பெயரை என்னுடைய முதல் படத்திற்கு வைத்துள்ளேன் என்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X