twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எம்ஜிஆர் என்னை மிரட்டினார்! - எஸ் ஏ சந்திரசேகரன்

    By Settu Sankar
    |

    Recommended Video

    விஜயின் அப்பாவை எம்ஜிஆர் மிரட்டினாரா?-வீடியோ

    சென்னை: நீதிக்கு தண்டனை படம் எடுத்ததற்காக ராமாவரம் தோட்டத்துக்கு அழைத்து நான் மிரட்டப்பட்டேன் என்று இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகரன் கூறினார்.

    70 படங்கள் இயக்கியுள்ள எஸ்ஏ சந்திரசேகரன், இப்போது ட்ராபிக் ராமசாமி படத்தில் நடித்து வருகிறார். அவரிடம் உதவியாளராக இருந்த விக்கி என்பவர் இயக்கியுள்ளார்.

    mgr threatened me says sa chandrasekaran


    இந்தப் படத்தின் டீசர் வெளியீட்டுக்கு வந்திருந்த எஸ்ஏசி, படத்தில் நடித்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.

    அவர் கூறுகையில், "இந்தப் படத்தை இயக்கியுள்ள விக்கி என்னைப் பற்றியோ என் படங்கள் பற்றியோ எதுவுமே தெரியாமல் என்னிடம் வந்து சேர்ந்தார். என்னை அவர் ஒரு இயக்குநராகவே கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. தமிழில் யாருமே இயக்குநர்கள் இல்லை என்பது அவர் கருத்து. அவர் ஹாலிவுட் ஃபீலில்தான் என்னிடம் வேலை செய்து வந்தார்.

    ஒரு கட்டத்தில் நான் இனி படம் எதுவும் இயக்கப் போவதில்லை என்று கூறி நான் என்னிடம் இருந்த ஐந்தாறு உதவி இயக்குநர்களை எல்லாம் வெளியே அனுப்பி விட்டேன். ஆனால் விக்கி போகாமல் எனக்கு உங்கள் கூட இருந்தால் போதும் சம்பளமே வேண்டாம் என்று கூடவே இருந்தார்.

    ஒரு நாள் அவர் என்னிடம் ஒரு புத்தகம் கொடுத்துப் படிக்கச் சொன்னார். அது டிராஃபிக் ராமசாமியின் 'ஒன் மேன் ஆர்மி' என்கிற வாழ்க்கைக் கதை. படித்தேன். அதைப் படமாக எடுக்கலாம் என்று விக்கி கூறிய போது என்னால் மறுக்க முடியவில்லை.

    கதையைப் படித்து முடித்த போது அவரும் என்னைப் போலவே சமூக அநியாயம் கண்டு பொங்குகிற மனிதராக இருந்தது புரிந்தது. தவறு நடந்தால் கோபப்படுவேன் என்ற அவரது குணம் எனக்குப் பிடித்தது. அவரை வெறும் போஸ்டர் கிழிப்பவராக நினைத்திருந்த எனக்கு அவர் பெரிய போராளியாகத் தெரிந்தார்.

    நான் 45 ஆண்டுகளில் 70 படங்கள் இயக்கி விட்டேன். நான் விட்டுச் செல்லும் பெருமையான அடையாளமாக என்ன செய்திருக்கிறோம்? என யோசித்த போது இப்படத்தை அப்படி ஒரு அடையாளமாக எடுக்க நினைத்தேன். நாங்களே எதிர்பாராத வகையில் பல நல்ல உள்ளங்கள் இதில் இணைந்தார்கள், எனக்கு ஜோடியாக ரோகிணி இணைந்தார். கதாநாயகன் போன்ற பாத்திரத்தில் ஆர்.கே.சுரேஷ் வந்தார். ஒரே காட்சி என்றாலும் நடிக்க ஒப்புக் கொண்ட விஜய் ஆண்டனியை மறக்க முடியாது. இப்படியே குஷ்பூ, சீமான் எல்லாம் படத்துக்குள் வந்தார்கள். சில காட்சிகளுக்கு ஒப்புக் கொண்டார் பிரகாஷ்ராஜ். இப்படியே பலரும் படத்துக்குள் வந்து பலம் சேர்த்துள்ளனர். இன்னொரு பெரிய நடிகரும் படத்தில் உள்ளார். அது சஸ்பென்ஸ்," என்றார்.

    சரி... ட்ராஃபிக் ராமசாமி சர்ச்சை மனிதராயிற்றே... அவர் முதல்வர் ஜெயலலிதாவைத்தான் அதிகம் எதிர்த்துள்ளார். அதையெல்லாம் காட்சியாக வைத்துள்ளீர்களா? மிரட்டல் ஏதும் வந்ததா?

    ட்ராஃபிக் ராமசாமி வாழ்க்கையில் என்ன நடந்ததோ அதையெல்லாம் அவர் சம்மதத்துடன்தான் காட்சிகளாக வைத்துள்ளோம். நீங்கள் கேட்கிற விஷயமும் இதில் அடங்கும். இந்தப் படம் தொடர்பாக எந்த மிரட்டல் வந்தாலும் பயமில்லை. ஏனென்றால் என் முதல் படம் சட்டம் ஒரு இருட்டறை படத்திலேயே மிரட்டல்களைப் பார்த்தவன் நான்.

    நீதிக்கு தண்டனை என்றொரு படம். அந்தப் படம் எடுத்தபோது, ராமாவரம் தோட்டத்துக்கு அழைத்து என்னை மிரட்டினார். அதையெல்லாம் பார்த்த எனக்கு, இப்போது வரும் எந்த மிரட்டலும் பெரிதல்ல," என்றார்.

    English summary
    Director SA Chandrasekaran says that he has faced many threaten in his film career
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X