“ஸ்ரீ பாலாஜி மகிமை”.. திருப்பதியில் படப்பிடிப்பு

By Mayura Akilan

எம்.ஜி.எஸ் பிலிம்ஸ் தயாரித்து வரும் திரைப்படம் ஸ்ரீ பாலாஜி மகிமை. திருப்பதி வெங்கடாசலபதியின் மகிமையை உணர்த்தும் இந்த திரைப்படத்தினை கோபால் ராம் இயக்குகிறார்.

முருகன், ஐயப்பன், அம்மன் என இந்துக்கடவுள்களைப் பற்றிய திரைப்படங்களின் வரிசையில் ஸ்ரீ பாலாஜி மகிமை சிறந்த படமாக அமையும் என்றார் இயக்குனர் கோபால் ராம்.

டெல்லிகணேஷ் – வையாபுரி

டெல்லிகணேஷ் – வையாபுரி

இந்தப்படத்தில் டெல்லி கணேஷ், தமிழ்மணி, வையாபுரி, பாலாஜி, ஜானகி, சங்கீதா மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரமேற்று நடிக்கிறார் இயக்குநர் கோபால்ராம்.

கடவுள் கொடுத்த வாய்ப்பு

கடவுள் கொடுத்த வாய்ப்பு

கடவுள் கொடுக்கும் வாய்ப்பினைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் அதனைத் தவறான வழியில் பயன்படுத்தும் மனிதன் தவறு செய்யும் போது கடவுள் நேரில் வந்து செய்யும் அற்புதங்களையும் சமுதாயத்திற்குத் தேவையான நல்ல விஷயங்களை அறிவுறுத்துவதையும் சுவைபடச் சொல்லும் படமாக ஸ்ரீ பாலாஜி மகிமை இருக்கும் என்கிறார் இயக்குனர் கோபால் ராம்.

திருப்பதியில் படப்பிடிப்பு

திருப்பதியில் படப்பிடிப்பு

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஊத்துக்கோட்டை, திருப்பதி மற்றும் மும்பையில் நடந்து வருகிறது. இரண்டு இசையமைப்பாளர்கள் பார்த்தசாரதி மற்றும் ராஜ்பாஸ்கர் இணைந்து இசையமைத்துள்ளனர்.

ஏழு பாடல்கள்

ஏழு பாடல்கள்

ஏழு மலையான் மகிமையைச் சொல்லும் படத்தில் ஏதேச்சையாக 7 பாடல்கள் அமைந்ததை நினைத்தாலே சிலிர்ப்பாக உள்ளது என்கின்றனர் இசையமைப்பாளர்கள்

பாடகர் உன்னி கிருஷ்ணன்

பாடகர் உன்னி கிருஷ்ணன்

இப்பாடல்களை உன்னி கிருஷ்ணன், சாகேத் ,பானு, சமீரா ஆகியோர் பாடியுள்ளனர்.

அக்டோபரில் ரிலீஸ்

அக்டோபரில் ரிலீஸ்

கிராபிக்ஸ் காட்சிகள் அதிகம் நிறைந்த ஸ்ரீ பாலாஜி மகிமை வரும் அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது.

தொழிற்நுட்ப கலைஞர்கள்

தொழிற்நுட்ப கலைஞர்கள்

கதை திரைக்கதை - இயக்கம் - கோபால் ராம்,ஒளிப்பதிவு - ராம் யோகா இசை - பார்த்தசாரதி , ராஜ்பாஸ்கர்,பாடல்கள் -வசனம் - பன்னீர் செல்வம், மக்கள் தொடர்பு: S.செல்வரகு

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X