அய்யய்யோ.. நான் இன்னும் சாகலை.. திடீரென கிளம்பிய வதந்திக்கு பதறியடித்து பதில் சொன்ன மியா கலிஃபா!
லெபனான்: முன்னாள் ஆபாச பட நடிகை மியா கலிஃபா உயிரிழந்து விட்டதாக பரவிய வதந்திக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் மியா கலிஃபா.
பிரபலங்கள் உயிரிழந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் அவ்வப்போது ஒரு சில விஷமிகள் இப்படி பரபரப்பை கிளப்பி விட்டு வருகின்றனர்.
தமிழ் நடிகர்கள் முதல் ஹாலிவுட் நடிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பல பிரபலங்கள் உயிரோடு இப்படி சமூக வலைதளங்களில் விளையாடி வருகின்றனர்.

ஆபாச உலகில் பிரபலம்
லெபனான் அமெரிக்க பெண்ணான மியா கலிஃபா கடந்த 2014ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆபாச பட நடிகையாக மாறினார். இரண்டு மாத காலங்களிலேயே உலகளவில் பிரபலமானார் மியா கலிஃபா. ஹைஜாப் அணிந்து கொண்டு இவர் ஆபாச படங்களில் நடித்த நிலையில், தீவிரவாதிகளிடம் இருந்து கொலை மிரட்டல்கள் வந்தன.

வேறு தொழில்
கொலை மிரட்டல் வந்த நிலையில், ஆபாச படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்ட மியா கலிஃபா வெப் கேம் மாடலாகவும் விளையாட்டு வர்ணனையாளராகவும் யூடியூபராகவும் செயலாற்றி வருகிறார். ஆனால், தற்போதும் இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியாக போஸ்ட்டுகளை போட்டு ரசிகர்களுடன் தொடர்பில் உள்ளார் மியா கலிஃபா.

மியா கலிஃபா மரண வதந்தி
பிரபலங்களுக்கு வரும் அந்த பிரச்சனை தற்போது மியா கலிஃபாவுக்கும் வந்துள்ளது. ஜாக்கி சான், அர்னால்டு உள்ளிட்ட பிரபலங்கள் உயிரிழந்து விட்டதாக முன்னதாக வதந்திகள் வந்து ரசிகர்களை சங்கடத்தில் ஆழ்த்திய நிலையில், மியா கலிஃபா உயிரிழந்து விட்டதாக சமூக வலைதளங்களில் பரவிய வதந்தி அவரையும் ரொம்பவே அப்செட் ஆக்கி உள்ளது.

என்ன காரணம்
ஆனால், தற்போது மியா கலிஃபா இறந்து விட்டார் என கிளம்பிய வதந்திக்கு பின்னணியில் ஒரு பெரிய விஷயமே இருக்கிறது. 4.2 மில்லியன் ரசிகர்களை கொண்ட மியா கலிஃபாவின் ஃபேஸ்புக் பக்கம் தற்போது நினைவு பக்கமாக மாறியது தான் அதற்கு காரணம் எனக் கூறுகின்றனர்.

நான் இன்னும் சாகல
தான் இறந்து விட்டதாக பரவி வரும் வதந்தியை தடுக்க தனது ட்விட்டர் பக்கத்தில் அதிரடியாக ஒரு மீமை போட்டு தான் இன்னும் சாகவில்லை என அறிவித்து வதந்திக்கு மிகப்பெரிய முற்றுப்புள்ளியை வைத்துள்ளார் மியா கலிஃபா. 1975ம் ஆண்டு வெளியான Monty Python And The Holy Grail படத்தில் இடம்பெற்ற காட்சியை பதிவிட்டு தனது ஸ்டைலில் வதந்திக்கு பதிலடி கொடுத்துள்ளார் மியா கலிஃபா.


Click it and Unblock the Notifications











