FIFA பார்க்க போன மியா கலிஃபா.. லட்சுமி அம்மாள் கீழ விழுந்ததும் துடிச்சுட்டாங்க
சென்னை: உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் என்றாலே உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மட்டுமல்ல, பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களும் நேரில் சென்று போட்டிகளை ரசிப்பது வழக்கம். அந்த வகையில், சமூக வலைதளங்களில் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட மியா கலிஃபாவும் FIFA உலகக் கோப்பை போட்டியை நேரில் கண்டு ரசித்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவை தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.
லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற போட்டியை மைதானத்திலேயே அமர்ந்து ரசித்த மியா கலிஃபா, ஸ்பெயின் அணியின் ஜெர்சியை அணிந்து ரசிகையாக உற்சாகம் காட்டியுள்ளார். கையில் பழமையான Contax கேமராவை வைத்தபடி புகைப்படம் எடுப்பது போன்ற போஸ் கொடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். ரசிகர்களுடன் சேர்ந்து ஆரவாரம் செய்தது உள்ளிட்ட புகைப்படங்களையும் மியா கலிஃபா பகிர்ந்துள்ளார்.

ஆனால் இந்த புகைப்படங்களைவிட இணையத்தில் அதிகம் பேசப்படுவது, போட்டியின் ஒரு முக்கிய தருணத்தில் அவர் வெளிப்படுத்திய முகபாவனைகள்தான். போட்டியின் நடுப்பகுதியில் ஸ்பெயின் அணியின் இளம் நட்சத்திர வீரரான லமின் யமால் மைதானத்தில் கீழே விழுந்தபோது, அவர் வலியால் துடித்துக் கொண்டு இருந்ததை தனது இன்ஸ்டாகிராம் போஸ்ட்டில் பகிர்துள்ளார்.
தமிழ்நாட்டில் துணி விற்பனை செய்யும் பெண் ஒருவர், லமின் யமாலை தெரியாமல் "லட்சுமி அம்மாள்" என்று குறிப்பிட்ட வீடியோ இணையத்தில் வைரலானது. அதன் பிறகு சமூக வலைதளங்களில் மீமாகவே அந்தப் பெயர் நிலைத்து விட்டது. இதன் காரணமாக, தற்போது மியா கலிஃபாவின் புகைப்படங்களையும் பகிர்ந்து, "FIFA பார்க்க போன மியா கலிஃபா... லட்சுமி அம்மாள் கீழே விழுந்ததும் துடிச்சுட்டாங்க!" என்று தமிழ்நாட்டு ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள். சில வாரங்களுக்கு முன்னர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் தனது யூடியூப் லைவில் பேசும்போது கூட லட்சுமி அம்மாள் என்று லமின் யமாலைக் குறிப்பிட்டிருந்தார்.



Click it and Unblock the Notifications