அடடா.. இப்படி ஆயிடுச்சே.. அந்தப்படம் இன்னைக்கு ரிலீஸாகலையாம்: சர்ச்சை இயக்குநரின் பிரேக்கிங் நியூஸ்!
சென்னை: இயக்குநர் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் உருவாகி இருக்கும் க்ளைமேக்ஸ் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.
Recommended Video
சர்ச்சைகளுக்கு பெயர் போன இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் க்ளைமேக்ஸ். இந்தப் படத்தில் அவரது ஆஸ்தான நடிகையான அமெரிக்க பார்ன் ஸ்டாரான மியா மல்கோவா நடித்துள்ளார்.
ஆக்ஷன் த்ரில்லரான இப்படத்தின் டீசர் , ட்ரெயிலர் மற்றும் ஒரு பாடல் என வரிசையாக ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. படம் முழுக்க முழுக்க பாலைவனத்தில் படம்பிடிக்கப்பட்டுள்ளது.

காதலனை மீட்க
பாலைவனத்தில் தனிமையில் கொண்டாடும் ஒரு காதல் ஜோடி முகமூடி கும்பல் ஒன்றிடம் சிக்கி தவிக்கும் வகையில் படம் உருவாக்கப்பட்டுள்ளது. காதலனை மீட்க போராடும் காதலியாக மியா மல்கோவா நடித்திருக்கிறார் என்பது படத்தின் ட்ரெயிலரில் தெரியவந்துள்ளது.

அடல்ட் காட்சிகள்
படத்தில் சண்டைக்காட்சிகள் மற்றும் அடல்ட் காட்சிகள் அதிகம் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக லிப்லாக், நிர்வாணக் காட்சிகள், ஆடை களைப்பு என வயது வந்தோருக்கான காட்சிகள் ஏராளமாக உள்ளது. கடைசியாக கடந்த வாரம் படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்று வெளியாகி வைரலானது.

தடுக்க முடியாது
இந்நிலையில் இந்தப் படத்தை ஆன்லைனில் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளார் இயக்குநர் ராம் கோபால் வர்மா. இதுதொடர்பாக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அவர் பதிவிட்ட டிவிட்டில், கடவுள் என்ன.. கொரோனா கூட க்ளைமேக்ஸ் படம் ஆன்லைனில் ரிலீஸ் ஆவதை தடுக்க முடியாது என கூறியிருந்தார்.

ரசிகர்கள் வாழ்த்து
மேலும் க்ளைமேக்ஸ் படம் வரும் 29ஆம் தேதி காலை 11 மணிக்கு, அதாவது இன்று ரிலீஸ் ஆகும் என்றும் ராம் கோபால் வர்மா வோர்ல்டு தியேட்டரான ஷ்ரேயா செட் ஆப்பில் ரிலீஸ் ஆகும் என்றும் தெரிவித்திருந்தார். இதனை பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வந்தனர்.

இன்று ரிலீஸ் இல்லை
இந்நிலையில் படம் இன்று ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர் ரசிகர்கள். ஆனால் க்ளைமேக்ஸ் படம் இன்று ரிலீஸ் ஆகவில்லை என்று டிவிட்டரில் தெரிவித்துள்ளார் ராம் கோபால் வர்மா. இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், பிரேக்கிங் நியூஸ்.. மியா மல்கோவாவின் க்ளைமேக்ஸ் முழு படமும் ஜூன் 6ஆம் தேதி, ஆர்ஜிவி வோர்ல்டு.இன்/ ஷ்ரேயா செட்டில் ரிலீஸ் ஆகும்.

மிரட்டல் போஸ்டர்
ஒருவருக்கு 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.. லாக்இன் விபரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும். படத்தின் 2வது ட்ரெயிலர் நாளை மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பான போஸ்டரையும் ஷேர் செய்துள்ளார். போஸ்டரே செம மிரட்டலாக உள்ளது.


Click it and Unblock the Notifications











