Michael: படம்னா இப்படி எடுக்கணும்.. 200 மில்லியன் பட்ஜெட்.. இப்போவே வசூல் எத்தனை ஆயிரம் கோடி தெரியுமா?

லாஸ் ஏஞ்சல்ஸ்: பாப் இசை உலகின் ராஜா என கொண்டாடப்படும் மைக்கேல் ஜாக்சனின் பயோபிக் 200 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில், அந்தளவுக்கு வசூல் ஈட்டுமா என கேள்விகள் கிளம்பிய நிலையில், படம் வெளியாகி 2 வாரங்களில் பட்ஜெட்டை விட டபுள் மடங்காக வசூல் செய்து மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது.

மைக்கேல் ஜாக்சனின் சகோதரரின் மகன் ஜாஃபர் ஜாக்சன் அப்படியே அச்சு அசலாக மைக்கேல் ஜாக்சனாக திரையில் ஜொலித்த நிலையில், அவரது ஆட்டத்தையும் நடிப்பையும் காண ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு படையெடுத்துள்ளனர்.

Michael beats so many records and earns 427 Million Dollars at Box Office

இதுவரை வெளியான இசை பிரபலங்களின் பயோபிக்கில் 2வது அதிக வசூல் ஈட்டிய படமாக மைக்கேல் மாறியுள்ளது. கூடிய விரைவில் முதல் இடத்தை பிடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மைக்கேல் ஜாக்சன் பயோபிக்: இயக்குநர் ஆண்டனி ஃபுக்குவா இயக்கத்தில் ஜாஃபர் ஜாக்சன் நடிப்பில் வெளியான மைக்கேல் திரைப்படம் மைக்கேல் ஜாக்சனின் பயோபிக் படமாக கடந்த ஏப்ரல் 24ம் தேதி வெளியானது. மைக்கேல் ஜாக்சன் குழந்தைப் பருவத்தில் பட்ட கஷ்டங்களும், அவரது தந்தையின் கட்டுப்பாடான வளர்ப்பு காரணமாக அவர் சாதிக்க துடித்ததும் அவர் ஸ்டேஜில் நட்சத்திரமாக மின்னியதுமாக இந்த படத்தை முடித்துள்ளனர். அடுத்த பாகத்தில் தான் மைக்கேல் ஜாக்சனின் சர்ச்சைகளும், அவர் சந்தித்த பஞ்சாயத்துகளும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

4000 கோடி வசூல்: 1800 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட மைக்கேல் திரைப்படம் உலகளவில் 4000 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக பாக்ஸ் ஆபீஇஸ் (427 மில்லியன் டாலர்) வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. அதிகபட்சமாக படத்தின் வசூல் 8000 கோடி வரை செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. மைக்கேல் ஜாக்சனை திரையில் பார்க்க உலகளவில் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருவதே இதற்கு காரணம் என்கின்றனர்.

2வது இடத்தில் மைக்கேல்: இதுவரை வெளியான இசை பிரபலங்களின் படங்களில் அதிகபட்ச வசூலை போஹிமன் ராப்ஸோடி திரைப்படம் பெற்று முதலிடத்தில் உள்ளது. அதன் மொத்த வசூல் 900 மில்லியன் டாலர். அதனை தொடர்ந்து 2வது இடத்தில் மைக்கேல் திரைப்படம் 2 வாரத்திலேயே 427 மில்லியன் டாலர் வசூலை ஈட்டி மாபெரும் சாதனையை படைத்துள்ளது. பயோபிக் படம்னா இப்படித்தான் எடுக்க வேண்டும் என்றும் முன்னணி நடிகர்கள் படங்கள் நம்ம ஊரில் உப்புமா படங்களாகவே வருவதால் தான் ரசிகர்கள் தியேட்டர் பக்கம் போவதே கிடையாது என்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X