twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மைக்கேல் ஜாக்சன்: அவருக்கு நிகர் அவர் மட்டுமே, ஹேப்பி பர்த்டே

    இன்று மைக்கேல் ஜாக்சனின் 60வது பிறந்தநாள்

    |

    நியூயார்க்: மைக்கேல் ஜாக்சன் ஒரு வாழ்ந்து கெட்ட ஜமீன் தாராக இருந்துள்ளார்.

    பாப் இசை உலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்த மைக்கேல் ஜாக்சனுக்கு இன்று 60வது பிறந்தநாள்.

    Michael Jackson 60th Birthday!

    உலகத்தையே கட்டி ஆளும் மைக்கேல் ஜாக்சன் இசையைக் கேட்டு புளகாங்கிதம் அடைந்த ரசிகனாக அவர் வாழ்ந்த வாழ்க்கைச் சூழலுக்குள் மனதை ஓடவிட்டால் அவர் ஒரு வாழ்ந்துகெட்ட ஜமீன்தாரின் நிலையில் கடைசிக் காலத்தை கழித்துள்ளார் எனத் தெரிகிறது.

    கருப்பின குடும்பத்தில் பிறந்த மைக்கேல் ஜாக்சனுக்கு தன் நிறம் குறித்து மிகுந்த தாழ்வு மனப்பான்மை இருந்துள்ளது. அதனால் பல அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு தன் நிறத்தை மாற்றியிருக்கிறார். திருமணம் செய்துகொண்ட மனைவிகள் மைக்கேலை விட்டு பிரிந்தாலும், இரண்டு குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பை ஏற்று அன்பாக வளர்த்துள்ளார்.

    இவர் அளவுக்கு எந்த ஒரு பாடகரும் சுகபோகியாக பணத்தை விரயம் செய்திருக்க மாட்டார்கள் எனக் கூறலாம். மைக்கேல் ஜாக்சன் இசை ஆல்பம், நிகழ்ச்சிகளின் மூலம் சம்பாதித்த சொத்து மட்டும் 2500 கோடி ரூபாய். அவருக்கு ஏற்பட்ட கடன் தொகை 2500 கோடியைத் தாண்டிவிட்டது. 1980, 90 காலகட்டங்களில் வருடத்திற்கு அசால்டாக 250 கோடி சம்பாதித்துள்ளார் மைக்கேல் ஜாக்சன். லாஸ் ஏஞ்செல்ஸில் அவர் வாழ்ந்து வந்த வீட்டின் வாடகை மட்டுமே மாதத்திற்கு ரூ.50 லட்சமாம். எங்கு சென்றாலும் 20 உதவியாளர்கள், இரண்டு தனி விமானங்கள் என அயல்நாட்டு அதிபரைப் போலதான் செல்வாராம். வருடத்திற்கு ரூ.250 கோடி சம்பாதித்த மைக்கேல், பேங்க ஆப் அமெரிக்காவில் ரூ.350 கோடியை கடனாகப் பெற்று செலவு செய்திருக்கிறார்.

    2001 ஆம் ஆண்டு அவர் வெளியிட்ட இன்விசிபிள் ஆல்பத்திற்கு மட்டும் ரூ.125 கோடி செலவிட்டாராம். ஒரு கடையில் செண்ட் மட்டுமே ரூ.5 லட்சத்திற்கு வாங்கியதாகச் சொல்கிறார்கள்.

    பாலியல் வழக்குகளுக்கான நீதிமன்ற செட்டில்மென்டுகள், வருமான வரி, ஊழியர்கள், அவர்களுக்கு கணக்கிலடங்கா சம்பளம் என வாரி இரைத்துள்ளார் மைக்கேல். ஒரு கட்டத்தில் ஆடம்பர செலவுகளை தாக்குப்பிடிக்க முடியாத மைக்கேல் 2500 ஏக்கர் பரப்பளவு கொண்ட நெவர்லேன்ட் பண்ணையையும் விற்றார். ஆல்பங்களுக்கு ராயல்டி வருமானமாக வருடத்திற்கு ரூ. 100 கோடி வருமானம் வந்து கொண்டிருந்தபோது ரூ. 2500 கோடி கடனில் மைக்கேல் ஜாக்சன் இறந்தார் என்ற அவப்பெயர் வந்தது. அதற்கு காரணம் வருடத்திற்கு ரூ.100 கோடி ராயல்டி கிடைத்தபோது அவருக்கு செலவு ரூ. 150 கோடியாக இருந்தது.

    English summary
    Pop music King Michael Jackson's 60th birth anniversary today.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X