என்னமா வளைக்கிறாரு... மைக்கேல் ஜாக்சன் மறுபிறவி எடுத்துட்டாரோ?
சென்னை : பாப் உலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்தவர் மைக்கேல் ஜாக்சன்.
Recommended Video
இவரின் பல்வேறு இசை ஆல்பங்கள் இன்றுவரை அனைவராலும் போற்றப்பட்டு வருகின்றன.
இவரை பின்பற்றி பலர் இவரது நடனத்தை பிரபலப்படுத்தி வருகின்றனர்.

பாப் மன்னன் மைக்கேல் ஜாக்சன்
பாப் உலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்து உலகளவில் ஏராளமான ரசிகர்களை கொண்டிருந்தவர் மைக்கேல் ஜாக்சன். அமெரிக்காவில் பிறந்த இவர் தன்னுடைய சகோதரர்களுடன் இணைந்து சிறுவயதிலேயே தனது இசைப் பயணத்தை துவக்கி சிறப்புகளை பெற்றார்.

த்ரில்லர் மூலம் உலகப்புகழ்
த்ரில்லர் என்ற இசை ஆல்பத்தின்மூலம் உலக புகழ்பெற்ற மைக்கேல் ஜாக்சனுக்கு தொடர்ந்து ஏறுமுகம்தான். பேட், டேஞ்சரஸ் போன்ற ஆல்பங்கள் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. கருப்பினத்தை சேர்ந்தவரான இவரை உலகளவில் அனைவரும் கொண்டாடினர்.

பல்வேறு சர்ச்சைகள்
அவர் வாழ்ந்த காலத்தில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினாலும் அவை எல்லாவற்றிலிருந்து வெளியில் வந்தார். குழந்தைகள் மீது மிகுந்த விருப்பம் கொண்டவராக இருந்த மைக்கேல் ஜாக்சன், கடந்த 2009ல் அதிக மருந்துகளை உட்கொண்டதால் உயிரிழந்தார்.

முறியடிக்க முடியாத அசைவுகள்
ஆயினும் இன்று வரை அவரது நடன அசைவுகளை முறியடிக்க யாரும் இல்லை என்றே கூறப்படுகிறது. பலரும் அவரது அசைவுகளை கொண்டு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் மைக்கேல் ஜாக்சனின் புகழை இதுவரை யாரும் அசைக்க முடியவில்லை.

கட்டிட கூலித் தொழிலாளி
இந்நிலையில் தற்போது கட்டிட வேலைகள் செய்யும் கூலித்தொழிலாளி ஒருவர் மைக்கேல் ஜாக்சனின் நடன அசைவுகளை தன்னிடம் கொண்டுவந்து ஆடி அதன்மூலம் அனைவரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளார். அவரது இந்த நடன அசைவுகள் மைக்கேல் ஜாக்சனை கண்முன்னே கொண்டு வந்துள்ளது.

வைரலாகும் நடனம்
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகின்றன. ஏழை கூலித் தொழிலாளியாக இருந்தாலும் இந்த தலைமுறையை சேர்ந்தவராக இருந்தாலும் மைக்கேல் ஜாக்சனின் நடனத்தை அப்படியே கொண்டு வந்துள்ளார் அந்த தொழிலாளி


Click it and Unblock the Notifications











