5 மில்லியன் பார்வையாளர்களை தொட்ட பேர் வச்சாலும் ரீமேக் பாடல்!

சென்னை : பாரிஸ் ஜெயராஜ் வெற்றியைத் தொடர்ந்து சந்தானம் வித்தியாசமான காமெடி கதைகளில் நடித்து வருகிறார்.

அந்த வகையிலேயே இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் அடுத்து வரும் திரைப்படத்திற்கு
டிக்கிலோனா என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இடம்பெறும் பேர் வச்சாலும் பாடல் ரீமேக் செய்யப்பட்டு டிக்கிலோனா படத்தில் இடம்பெற இப்பொழுது இந்த பாடல் இணையதளத்தில் 5 மில்லியன் பார்வையாளர்களை தொட்டு சாதனை படைத்துள்ளது.

தொடர்ந்து வெற்றி

தொடர்ந்து வெற்றி

சினிமாவில் காமெடியனாக அறிமுகமாகி இப்போது ஹீரோவாக கலக்கி கொண்டுள்ளார் நடிகர் சந்தானம். ஹீரோவான பிறகும் படங்களில் காமெடி செய்வதை வழக்கமாக கொண்டுள்ள இவர் ஆக்ஷனிலும் பட்டையை கிளப்பி வருகிறார். வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார் அந்த வகையில் சமீபத்தில் வெளியான பாரிஸ் ஜெயராஜ் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலை அள்ளியது.

மூன்று வேடங்களில்

மூன்று வேடங்களில்

இந்த நிலையில் அறிமுக இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் டிக்கிலோனா படத்தில் சந்தானம் நடித்து வருகிறார். இந்த படத்தில் முதன்முறையாக மூன்று வேடங்களில் சந்தானம் நடித்துள்ளார். இதன் ட்ரைய்லர் சென்ற வருடம் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றது. முனீஸ்காந்த், ஹர்பஜன்சிங், யோகிபாபு, நிழல்கள் ரவி என பலர் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

திருமணத்தை நிறுத்த

திருமணத்தை நிறுத்த

2027 இல் இருந்து 2020க்கு டைம் ட்ராவல் மூலம் பயணம் செய்து வரும் சந்தானம் தனக்கு நடக்க இருந்த திருமணத்தை எவ்வாறு நிறுத்துகிறார் என்பதை சுவாரசியமாகவும் கலகலப்பான காமெடி உடனும் தயாராகியுள்ளது. மேலும் இந்த படத்தில் சைக்கிள் கேப் மற்றும் பேர் வச்சாலும் என இரண்டு பாடல்கள் வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது.

5 மில்லியன்

5 மில்லியன்

கமல்ஹாசனின் மைக்கேல் மதன காமராஜன் திரைப்படத்தில் இடம்பெற்ற பேர் வச்சாலும் பாடல் ரீமேக் செய்யப்பட்டு யுவன் சங்கர் ராஜா இந்த பாடலுக்கு மேலும் மெருகேற்றி அசத்தியுள்ளார். பேர் வச்சாலும் ரீமேக் பாடல் வெளியானது முதலே ரசிகர்களிடம் பேராதரவை பெற்று வர இப்பொழுது 5 மில்லியன் பார்வையாளர்களை தொட்டு சாதனை படைத்துள்ளது. இதனை இயக்குனர் கார்த்திக் யோகி பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X