தளபதி 67 அறிவிப்பு டீசர் பயங்கரமாக இருக்கு.. மைக்கேல் பட நாயகன் உற்சாகம்!
சென்னை : நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு படத்தை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தின் சூட்டிங் துவங்கியுள்ளது.
மிஷ்கின், சாண்டி மாஸ்டர் உள்ளிட்டவர்கள் பங்கேற்றுள்ள படத்தின் முதல்கட்ட சூட்டிங் தற்போது கொடைக்கானலில் நடைபெற்று வருகிறது.
இந்த சூட்டிங்கை தொடர்ந்து காஷ்மீருக்கு அடுத்தக்கட்ட சூட்டிங்கிற்காக படக்குழு புறப்பட உள்ளது. படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் பிப்ரவரி முதல் வாரத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்
நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு படம் கடந்த 11ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி, தற்போது சர்வதேச அளவில் ஏறக்குறைய 300 கோடி ரூபாய் வசூலை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பேமிலி சென்டிமெண்டுடன் உருவாகி ரசிகர்களை இந்தப் படம் வெகுவாக கவர்ந்துள்ளது.

வசூல் மழையில் வாரிசு படம்
இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்த நிலையில், பிரபு, சரத்குமார், ஜெயசுதா உள்ளிட்டவர்களும் படத்தில் முக்கியமான கேரக்டர்களில் நடித்திருந்தனர். வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் வெளியான இந்தப் படம் துவக்கத்தில் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையிலும் வசூல் மழை பொழிந்து வருகிறது.

தளபதி 67 படம்
இந்தப் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் தற்போது இணைந்துள்ளார் விஜய். இந்தப் படத்தின் பூஜை எளிமையாக போடப்பட்டு, தற்போது கொடைக்கானலில் படத்தின் சூட்டிங் துவங்கியுள்ளது. இதில் மிஷ்கின், சாண்டி மாஸ்டர் உள்ளிட்டவர்கள் இணைந்துள்ளனர்.

காஷ்மீரில் அடுத்தக்கட்ட சூட்டிங்
விரைவில் படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் காஷ்மிரீல் துவங்கவுள்ள நிலையில், அதில் விஜய் பங்கேற்கவுள்ளதாகவும், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் -விஜய் காம்பினேஷன் சீன்கள் எடுக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் பிப்ரவரி முதல் வாரத்தின் படத்தில் அடுத்தடுத்த அப்டேட்களை வெளியிட உள்ளதாக லோகேஷ் சமீபத்தில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பொழுது தெரிவித்துள்ளார்.

தளபதி 67 அறிவிப்பு டீசர்
இந்நிலையில் தளபதி 67 படத்தின் அறிவிப்பு டீசர் குறித்து பேசியுள்ள மைக்கேல் பட நாயகன் பயங்கரமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த அளவில் மிகப்பெரிய நட்சத்திரங்களுடன் லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தில் களமிறங்கியுள்ளதாகவும், இது தமிழ் சினிமாவின் மிகப்பெரிய பெருமையாக அமைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதிக கவனத்தை பெற்றுள்ள தளபதி 67
விஜய்யின் கேரியரில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது தளபதி 67 படம். முன்னதாக விஜய் -லோகேஷ் கனகராஜ் காம்பினேஷனில் மாஸ்டர் படம் வெளியான போதிலும், விக்ரம் படத்தின் அதிரி புதிரி வெற்றியை தொடர்ந்து தற்போது தளபதி 67 படம் சர்வதேச அளவில் கவனத்தை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











