வெள்ளி காசில் சிரஞ்சீவி முகம்...அசர வைத்த ரசிகர் மன்ற நிர்வாகிகள்
ஐதராபாத் : ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மாவட்டம் ராஜம் பகுதியை சேர்ந்த நுண்கலை கலைஞர் மகதா ஜெகதீஷ். இவர் தெலுங்கு மெகா ஸ்டாரான சிரஞ்சீவியின் தீவிர ரசிகர்.

சிரஞ்சீவி மீது கொண்ட தீராத பாசம் காரணமாக வெள்ளி காசில் சிரஞ்சீவியின் உருவத்தை பொறிக்க திட்டமிட்டார். இந்த யோசனையை ராஜம் பகுதியை சேர்ந்த அந்தர்ஜாதீய சிரஞ்சீவி கூட்டமைப்பு (ஏசிஃஎப்) என்ற பெயரில் இயங்கி வரும் சிரஞ்சீவி ரசிகர் மன்றத்தினரிடம் தெரிவித்தார்.

அவர்கள் உதவியுடன் 2.380 கிராம் எடை கொண்ட வெள்ளி காசில் சிரஞ்சீவியின் உருவத்தை வடிவமைத்தார். இதற்காக அவர் எடுத்துக் கொண்ட நேரம் 30 நிமிடங்கள் மட்டுமே.
இந்த வெள்ளி காசின் ஒரு புறத்தில் சிரஞ்சீவி உருவமும், மற்றொரு புறம் ஏசிஃஎப் எனவும் பொறிக்கப்பட்டுள்ளது. இதனை ஏசிஃஎப் அமைப்பை சேர்ந்த வைஷ்யராஜ் பவன் குமார் னெ்பவர் பிரபலபடுத்தி வருகிறார்.
Comments


Click it and Unblock the Notifications