ஹே சிங்காரி.... பட்டையை கிளப்பும் மைக்செட் டீமின் ஆல்பம் பாடல்
சென்னை : மைக்செட் குழுவினரின் முதல் வீடியோ ஆல்பம் வெளியிடப்பட்டுள்ளது.
ஹே சிங்காரி என்று துவங்கும் அந்த பாடலில் சூப்பராக குத்தாட்டம் போட்டுள்ளார் ஸ்ரீராம்.
இந்த பாடலை பாடியுள்ளார் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார்.

ஏராளமான ரசிகர்கள்
மைக்செட் குழுவினர் விதவிதமான வீடியோக்களை யூடியூபில் பதிவிட்டு அதன்மூலம் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளனர். இவர்களது சோதனைகள் அடிப்படையிலான வீடியோக்கள் மிகவும் பிரபலமானவை. இவர்கள் வாரத்திற்கு ஒருமுறை வீடியோக்களை பதிவிட்டாலும் ரசிகர்கள் காத்திருந்து ஆதரவு அளித்து வருகின்றனர்.

ஸ்ரீராம் இயல்பான நடிப்பு
மைக்செட் டீம் தொடர்ந்து புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. புதிய முயற்சிகளுக்கு எப்போதுமே ரசிகர்களின் ஆதரவு இருக்கும் என்பதற்கு இவர்களும் உதாரணம். ஸ்ரீராமின் இயல்பான மற்றும் அப்பாவித்தனமான முகபாவங்களுக்கு தனி ரசிகர்கள் வட்டமே காணப்படுகிறது.

புதிய முயற்சி
இந்நிலையில் தற்போது மேலும் ஒரு புதிய முயற்சியாக தனிப்பட்ட வீடியோ ஆல்பத்தை மைக்செட் குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஸ்ரீராம் மற்றும் அனன்யா ராவ் மற்றும் அபூர்வா ராவ் ஆகியோர் இணைந்து இந்த வீடியோவை பிரசண்ட் செய்துள்ளனர்.

ஜிவி பிரகாஷ் பாடல்
ஹே சிங்காரி என்று துவங்கும் இந்த பாடலை ஜிவி பிரகாஷ்குமார் இந்த பாடலை பாடியுள்ளார். பாடலை குல்கார்த்திக் எழுதியுள்ளார். வில்வா இந்த பாடலை இயக்கியுள்ளார். மேலும் நடனம் அமைத்துள்ளனர் அபு மற்றும் சால்ஸ். இந்த லாக்டவுன் காலத்தில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொண்டுவர இந்த வீடியோவை எடுத்துள்ளதாக மைக்செட் குழுவினர் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











