»   »  தொப்புள் மேட்டர்: இயக்குனரிடம் மன்னிப்பு கேட்டார் டாப்ஸி

தொப்புள் மேட்டர்: இயக்குனரிடம் மன்னிப்பு கேட்டார் டாப்ஸி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தொப்புள் விஷயத்திற்காக தெலுங்கு இயக்குனர் ராகவேந்திர ராவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் டாப்ஸி.

கே. ராகவேந்திர ராவ் இயக்கிய ஜும்மாண்டி நாதம் தெலுங்கு படம் மூலம் நடிகையானவர் டாப்ஸி. இந்நிலையில் அவர் அண்மையில் அளித்த பேட்டியின்போது ராகவேந்திர ராவை விமர்சித்திருந்தார்.

ராவின் படத்தில் ஹீரோயினின் தொப்புளை காட்டுவது வழக்கம்.

டாப்ஸி

டாப்ஸி

ராகவேந்திர ராவின் படத்தில் நடித்தபோது டாப்ஸியின் தொப்புளில் தேங்காயை போட்டுள்ளார்கள். இதில் என்ன கவர்ச்சி இருக்கிறது என்று டாப்ஸி கேள்வி எழுப்பியிருந்தார்.

டோலிவுட்

டோலிவுட்

டாப்ஸியின் பேட்டி வீடியோவை பார்த்த டோலிவுட் ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சித்தனர். எங்க ராகவேந்திர ராவை எப்படி விமர்சிக்கலாம் என்று சண்டைக்கு பாய்ந்தனர்.

மன்னிப்பு

மன்னிப்பு

ஆளாளுக்கு கலாய்ப்பதை பார்த்த டாப்ஸி வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டு அதன் மூலம் ராகவேந்திர ராவிடம் மன்னிப்பு கேட்டு பிரச்சனையை முடித்து வைத்துள்ளார்.

இல்லை

இல்லை

நான் என்னை கலாய்த்து தான் அந்த பேட்டியில் அப்படி கூறினேன். அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்பதை தெரிந்து கொள்ள எனக்கு நேரம் ஆனது. என்னை கலாய்க்கும் போது நான் யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் தயவு செய்து மன்னித்துக்கொள்ளுங்கள் என்று டாப்ஸி தெரிவித்துள்ளார்.

ராவ்

ராவ்

யார் மனதையும் புண்படுத்தக் கூடாது என்று சொல்லி வளர்த்துள்ளார்கள். ராகவேந்திர ராவ் காருவால் தான் நான் இன்று திரைத்துறையில் உள்ளேன். நான் அவரை அவமதித்துவிட்டதாக கூறுவது வினோதமானது. நான் அவரை அவமதிக்கவில்லை அப்படி ஒருபோதும் செய்யவும் மாட்டேன் என்கிறார் டாப்ஸி.

English summary
Actress Taapsee has apologised to Telugu director Raghavendra Rao for her comments about showing midriff in his movies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil