"மிக மிக அவசரம் " பொறுமையாக நாளை வெளியாகி மக்களின் மனதை வெல்ல போகுது

Recommended Video

ACTRESS SRI PRIYANKA INTERVIEW | MIGA MIGA AVASARAM MOVIE | FILMIBEAT TAMIL

ஸ்ரீபிரியங்காவை நேரில் அழைத்து பாராட்டிய அமைச்சர்

சுரேஷ் காமாட்சி இயக்கி தயாரித்துள்ள "மிக மிக அவசரம்" படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று நடைபெறவிருக்கிறது. அதில் தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்து கொண்டார். அப்போது படத்தில் சிறப்பாக நடித்திருக்கும் ஸ்ரீபிரியங்காவை தமிழக அமைச்சர் நேரில் அழைத்து பாராட்டி இருக்கிறார்.

Miga miga avasaram movie releases tomorrow

சுரேஷ் காமாட்சி இயக்கி தயாரித்துள்ள மிக மிக அவசரம் என்ற படத்தில், பெண் கான்ஸ்டபிள் வேடத்தில் நடித்துள்ளார் ஸ்ரீபிரியங்கா. சினிமாவுக்கு வந்து 5 வருடங்களுக்கு மேலாகி விட்டது என்றாலும், நினைத்த இடத்துக்கு இன்னும் வர முடியவில்லை என்று கூறியுள்ளார்.

இப்படம் நவம்பர் 8ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில், தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ இப்படத்தை பார்த்திருக்கிறார். பெண் காவலர்கள் படும் அவஸ்தையை அப்படியே தத்ரூபமாக நடிப்பில் கொண்டு வந்திருப்பதாக கூறி ஸ்ரீ பிரியங்காவை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்திருக்கிறார் அமைச்சர்.

தமிழக அமைச்சர் ஒரு படத்திற்கு இவ்வளவு சப்போர்ட் கொடுக்கிறார் என்பது பாராட்டுக்குரிய விஷயம். அவர் திரைதுறைக்காக பல முன்னேற்றங்களை கொண்டுவருவதில் முனைப்பாக இருப்பது திரைதுறையின் வளர்ச்சிக்கு உதவும்.

அப்போது, ஸ்ரீபிரியங்காவின் பெற்றோரும் உடனிருந்தனர். இந்த தருணம் ஸ்ரீபிரியங்காவின் பெற்றோருக்கு ஒரு நெகிழ்ச்சியான தருணமாக அமைந்துள்ளது. தங்களுடைய மகள் இத்தனை நாட்கள் பட்ட கஷ்டங்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி என்றனர்.

உண்மையிலேயே ஒரு பெண் காவலர் தினம் தினம் மேல் அதிகாரிகளால் சந்திக்கும் பிரச்சனைகளை மிகவும் அழகாக எடுத்துரைத்துள்ளது இந்த படம்.

சிறிய பட்ஜெட் படமாக இருப்பினும் மிகவும் அழுத்தமாகவும் உணர்வு பூர்வமாகவும் படத்தை நகத்தியுள்ளார் இயக்குனர். படத்தில் நடித்திருக்கும் மற்ற கதாபாத்திரங்களும் தங்களது பணியை சிறப்பாக செய்துள்ளனர்.

மிக மிக அவசரம் திரைப்படம் 125 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. திரையரங்க உரிமையாளர்கள் பலரும் இந்த திரைப்படத்திற்கு உறுதுணையாய் இருக்கிறார்கள்.

மேலும் இந்த சந்திப்பிற்கு எஸ்.வி.சேகர், அபிராமி திரைஅரங்கத்தின் உரிமையாளர் அபிராமி ராமநாதன், கே. சேகர் உள்ளிட்டோர் மேடையில் இப்படத்தை பற்றி மிகவும் பாசிட்டிவாக பேசினார்கள்.

சிறிய பட்ஜெட் திரைப்படங்களுக்கு வெகுவாக வரவேற்பு கிடைக்காது ஆனால் இந்த திரைப்படத்திற்கு திரையரங்க உரிமையாளர்கள் பலரும் உறுதுணையாய் இருப்பது வரவேற்கத்தக்கது.

இப்படம் நிச்சயம் மக்களிடம் வரவேற்பை பெறும் .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X