திருமணத்துக்குப் பிறகு ரொமான்டிக் போஸ்ட்.. 'என் காதல், என் ஆன்மா..' ராணாவை அப்படி புகழும் மிஹீகா!
ஐதராபாத்: திருமணத்துக்குப் பிறகு, தனது காதல் கணவர் ராணாவை, அப்படி புகழ்ந்திருக்கிறார் மிஹீகா பஜாஜ்.
நடிகர் ராணாவுக்கும் ஐதராபாத்தை சேர்ந்த மிஹீகா பஜாஜ் என்பவருக்கும் காதல் மலர்ந்தது.
மிஹீகா தனது காதலை ஏற்றுக் கொண்டதாக, கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவித்திருந்தார், நடிகர்ராணா.

கொரோனா பிரச்னை
ஐதராபாத்தை சேர்ந்த மிஹீகா பஜாஜ், ட்யூ ட்ராப் டிசைன் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர்கள் திருமணத்துக்கு இருவீட்டு பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து கடந்த மாதம் இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ஆகஸ்ட் 8 ஆம் தேதி, திருமணம் நடத்த முடிவு செய்திருந்தனர்.

ராமநாயுடு ஸ்டுடீயோ
அதன்படி ஐதராபாத்தில் உள்ள ராமநாயுடு ஸ்டூடியோவில் இவர்கள் திருமணம் எளிமையாக நடந்தது. இந்த திருமணம் தெலுங்கு-மார்வாரி கலாச்சாரங்களின் ஒருங்கிணைப்பாக நடைபெற்றது. விழாவில் நடிகர்கள் வெங்கடேஷ், நாக சைதன்யா, நடிகர் ராம் சரண் தேஜா, அவர் மனைவி உபாசனா, அல்லு அர்ஜூன், நடிகை சமந்தா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

என் காதல், என் வாழ்க்கை,
திருமணத்துக்குப் பிறகு, தனது புகைப்படங்களை இப்போது, சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ள மிஹீகா பஜாஜ், ரொமான்டிக்காக தனது காதல் கணவர் நடிகர் ராணா டக்குபதியை புகழ்ந்து தள்ளியுள்ளார். அதில், 'என் காதல், என் வாழ்க்கை, என் இதயம், என் ஆன்மா அனைத்தும் நீங்கள்தான். வாழ்க்கையில் என்னை சிறந்த நபராக, நீங்கள் உருவாக்குகிறீர்கள். ஐ லவ் யூ' என்று கூறியுள்ளார்.

நடிகை சமந்தா கமென்ட்
இதற்கு மிஹீகாவின் உறவினராகி இருக்கிற நடிகை சமந்தா, 'இது இனிமையாக இருக்கிறது' என்று கமென்ட் அடித்துள்ளார். இந்த புகைப்படங்களுடன் மஹீகா, தனது பெற்றோர், மற்றும் குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் அதில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. ஏராளமான ரசிகர்களும் அவர்களை வாழ்த்தியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











